எவ்வாறு வழிகாட்டிகளாயிருந்தனவென்பதை நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார்.1 யோகம் குரு மாணாக்க முறையில் நெடுங்காலம் வந்தனவும் உபநிடதங்களிற் கூறப்பட்டனவுமாகிய யோகநூற் பொருள்களைப் பதஞ்சலி முனிவர் திரட்டி (கி. மு. 150) யோக சூத்திரங்களாகச் செய்தார்.2 யோகம் என்பது மனத்தை ஓரிடத்தில் நிறுத்திச் செய்யப்படும் தியானம். யோகநூலில் மனத்தை ஓரிடத்தில் நிறுத்துதற்குரிய பயிற்சிகளும் யோகத்தினால் அடையும்பேறும் நன்கு விளக்கப்படுகின்றன. யோகநூலும் நியாய முறையாக உண்மைகளை ஆராய்ந்து, யோகத்தின் முடிவு, கடவுளை அடைதல் எனக் கூறுகின்றது. ஆதலின் இது, ஈசுவர சாங்கியம் எனப்படும்.3 யோகநூல் பிரணவத்தை உச்சரிக்கவேண்டும் என வற்புறுத்துகின்றது. மனம் சார்ந்த தன் தன்மையை அடைகின்றதென்று கூறுகின்றது;4 பற்றை அறுக்கவேண்டுமென மொழிகின்றது; 1. Oldenburgh has indeed fairly worked out both in his earliest volumes on buddha how the Upanishads prepared the way for Buddhistic thought and derives precise for having attempted a hitherto unattempted work. - Constructive survey of Upanishadic Philosophy P. 4. 2. The yoga therefore under that name was recognised anticidentally to Pathanjali and is not to be regarded as the invention of his. - The uphoisms of the Yoga Philosophy of Pathanjali with illustrative extracts form the Commentary by Boja Rajah. 3. In admitting the existence of a divine being in which the good qualities belonging to man reach their limit, the yoga hence named the Seswara Sankya differs from the Sankya of Kapila what is known as mriswara - Ibid. 4. The change of the mind into the likeness of what is Pondered. - Ibid - "யாதொன்று பற்றி னதனியல் பாய்நின்று பாசமறும் பளிங்கனையத்து நீ," |