அப்பற்றை அறுப்பதற்கு கடவுளைப்பற்றவேண்டுமென நவில்கின்றது. கடவுள் பத்தி, யோகங்களிற் சிறந்ததென அறைகின்றது.1 அகத்தூய்மை புறத்தூய்மைகளைப் பற்றிப் பேசுகின்றது. நல்லவர் இணக்கத்தைப்பற்றிச் சாற்றுகின்றது; மனம் உயிரின் அகக் கருவியாதலைப்பற்றிப் புகல்கின்றது. சாங்கிய நூலும் யோக நூலும் உயிர்கள் பல எனக் கொள்கின்றன.2 இவ்வகை யோகவழிகளை எல்லாம் தமிழ்மக்கள் மிகமிக முற்பட்ட காலத்திலேயே அறிந்திருந்தார்கள் என்பது மொகஞ்சொதரோவிற் காணப்பட்ட திருவுருவங்களால் நன்கு தெளிவுறுகின்றதென்பது முன்னோரிடத்திற் கூறப்பட்டது. யோகமும் ஆலய வழிபாடும் யோகப் பழக்கத்துக்கு ஒரு வடிவை மனத்தில் நிறுத்துதல்வேண்டும். அல்லாவிடின் மனம் ஓர் இடத்தில் நில்லாது. ஆகவே, குணங்குறியில்லாத கடவுளை ஒரு வடிவம் கொடுத்து நினைக்க வேண்டியதாயிற்று. அதற்கு ஆலயங்களிலுள்ள திருவுருவங்கள் பயனளித்தன. சமயதீக்கை, மந்திரங்களை நூற்றெட்டு ஆயிரத்தெட்டு என்று உச்சரித்தல் முதலியன. அவ்வாறு செய்யுமிடத்து மணிகளை எண்ணுதல் மூச்சுப்பயிற்சி புரிதல் போல்வன யோகப் பயிற்சியின் முதற்படிகளாகும். இப்பொழுது, ஆலயபூசை அரசனுக்குச் செய்யும் வழிபாடுபோல் கருதப்படாது, யோகநிலையிற் கைவந்தார் ஒருவர் இவ்வுலக 1. Perfection of meditation Comes from possessing devotion to the lord. - Ibid. 2. Where Sankya argues the objections that is souls well but one, then all will would be happy when on is happy, all would die when one died, and so on, which is contrary to experience. - Ibid. P. 63. |