இவ்வுண்மைகளைத் தமிழர் வாயிலாக அறிந்த ஆரியமக்கள் சிலர் அவற்றை மற்றையதம் குழுவினர்களுக்கு முணர்த்துவான் விழைந்து, அவைகளை அவர்கள் படித்து விளங்கக்கூடிய மொழியில் வெளியிட்டனர். வடக்கிலுள்ளவர்களின் மொழியைத் தெற்கிலுள்ளவர்களும் அறிந்திருந்தனர். தெற்கிலுள்ளவர்கள் தம்மிடத்திலுள்ளனவும் வடக்கிலுள்ளவர்கள் நன்கு அறியாதனவுமாகிய உண்மைப் பொருள்களை அவர்கள் கண்டு வியக்குமாறும் நூல்கள் இயற்றினர். இது, இக்காலம் திருக்குறள், சிலப்பதிகாரம், தமிழர்நாகரிகம் போன்ற பொருள்களைத், தமிழ் அறியாத மேல்நாட்டு அறிஞரும் வடநாட்டு அறிஞரும் கண்டு வியக்குமாறு தமிழ் அறிஞர் ஆங்கிலமொழியில் வெளியிட்டு வருதல் போன்றதோர் வழக்கு. ஆங்கிலமொழியில் எழுதப்படும் நூல்கள் எல்லாம் ஆங்கிலமக்கள் எழுதியனவாகாதனபோல வடமொழியில் எழுதப்பட்ட நூல்கள் எல்லாம் வடவர் எழுதியனவாகா. வடமொழி வடக்கே உள்ளவர்களது என்று கருதப்படினும் தெற்கே உள்ளவர்களே அதனையும் நன்கு கற்று அம்மொழியில் அரிய நூல்கள் இயற்றி அதனையும் வளம்படுத்தினர். சாணக்கியர், இராமானுசர், சங்கரர், நீலகண்டர் போன்று வடிமொழியிற் சிறந்த நூல்கள் செய்து அம்மொழியை வளம்படுத்தியவர்கள் யாருமில்லை. கபிலரும் அவர்மரபில் வந்த சித்தார்த்த புத்தரும் தமிழர்களே என்பது முன்பு விளக்கப்பட்டது. பழைய கட்டிடக்கலை இருக்கின்றது; எந்தத் தேசத்திற் காணப்படும் பழைய கட்டிடங்களையும் நோக்கி, அவை இன்ன நாட்டுக் கட்டிடக்கலை அமைப்புள்ளன என, அந்நூல் அறிஞர் எளிதில் அறிந்துகூற வல்லுநராவர். அதனை ஒப்பவே எம்மொழியில் எழுதப்பட்டிருப்பினும் நூல்களில் பொருளையும் போக்கையும்கொண்டு அவை எவருக்குரியன என |