ஆரியமக்கள் இந்தியாவுக்கு வெளியேயுள்ள நாடுகளினின்றும் வந்தோர். இவர்களது மொழியும் பழக்க வழக்கங்களும் கிரேக்க, உரோம, தியுதோனிய, சிலாவிய மக்களின் மொழிக்கும் பழக்க வழக்கங்களும் இனமுடையன. மக்கள் தம்மைச் சூழ்ந்துள்ள பிறமக்களின் சேர்க்கைக் கேற்பப் பழக்கவழக்கம், மொழி, குணம் ஆகியவற்றால் மாறுபடும் இயல்பினர். "நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகு மறிவு" (குறள்). இந்து ஐரோப்பிய மக்களுக்குப் பொதுவாகிய சொற்களும் பழக்கவழக்கங்களும் பலவுண்டு. புதிதாக வந்த ஆரியமக்கள் புதிதாகக் கையாண்ட பழக்கவழக்கங்களையும் புதிய சொற்களையும் அறிந்துகொள்ளவேண்டுமானால் இந்து ஐரோப்பிய மக்களுக்கு மாத்திரம் பொதுவாயுள்ள அவைகளை இந்து ஆரிய மக்களிடையே காணப்படுவனவற்றிலிருந்து கழித்துப் பார்த்தல்வேண்டும். இந்து ஐரோப்பிய மக்களுக்குப் பொது அல்லாதனவெல்லாம் இந்திய ஆரிய மக்களுக்கு, இந்திய பூர்வமக்களிடமிருந்து கிடைத்தனவே. ஆரிய மக்களுக்குள்ளவற்றை ஆரியருக்கு இல்லாதவற்றினின்று பிரித்தறிய வேண்டுமாயின் இம்முறையைக் கையாள வேண்டுமென ஆராய்ச்சி நுண்ணுணர்வு படைத்தார் நுவல்கின்றனர்.1 1. There are in all Indo-aryan languages, a considerable number of words which cannot apparently be identified in other. Indo-European languages. This is specially the case in modern vernaculars and the old opinion was that such words had, generally speaking been borrowed from the language of the tribes which inhabited India-before the Aryan invation. The steady progress of philological studies in later years has enabled us to trace an overincreasing portion of such words to Sanskrit, and many scholars now hold that there have hardly been any loan at all. It has however been overlooked that it is sufficient to show that a word is found in Sanskrit or in vedic dialects, in order to prove that it belonged to the original language of the Aryan. the foreign element must reach into the oldest times, and it would be necessary to trace dubeous words not only in sanskrit, bul also in other languages of the Indo-European family. That is exactly what philology has, in many Cases failed to do. There are i.g. a number of verbal roots in sanskrit which do not occur in other Indo-European forms of speech. The same is the case with a considerable portion of vocabulary. There is how-ever every possibility for the supposition that at least a considerable portion of such words and bases has been b0rrowed from the Dravidian - Linguistic survey of India - Vol. IV, pp 278-9 Grierson. |