ஆரியர் முன் வாழ்ந்த நாடு மிக்க குளிர் உடையது. அவர்கள் புதிதாக வந்தடைந்த மத்திய வெப்பதட்ப நிலையுடையநாட்டில் தாம் முன் அறிந்திருந்த குளிர்தேசத் தாவரங்களையும் பறவைகளையும் விலங்குகளையும் பிறவற்றையும் காணமுடியாது. அவர்கள் இந்தியநாட்டை அடைந்தபின் தாம் புதிதாக அறிந்த பொருள்களுக்கு, ஆதிமக்களின் மொழிகளில் வழங்கிய பெயர்களையே இட்டு வழங்கினார்கள் என்பதில் ஒரு புதுமையும் இல்லை. இவ்வாறு கொல் ( Kol ) மொழியினின்றும் வேதமொழியிற்சென்று ஏறியுள்ள பல சொற்களை பிறிஸ்லுஸ்கி என்பார், ஆரியருக்கும் தமிழருக்கும் முற்பட்ட இந்தியா என்னும் நூலில் நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார். கொண்டர், முண்டர், சாந்தால் எனப்படும் மக்கள் தமிழரின் பிரிவினரேயென்றும், அவர்கள் மொழியிலுள்ள சொற்கள் வழக்கு நின்றுபோன பழந்தமிழ்ச் சொற்களென்றும் ஆராய்ச்சியாளர் கண்டுள்ளார்கள். இதனை முண்டர் என்னும் தலைப்பின்கீழ் விளக்குதும். சத்தேசி என்பார் இருக்கு வேதத்திற் காணப்படும், அணு, அரணி, கபி, கருமாரா, காலம், கானம், நானா (பல) நீலம், புட்பம், பூசான பல (பழம்), பீசம், மயூரம், இராத்திரி, உருவம் |