பக்கம் எண் :

தமிழ் இந்தியா211

முதலிய பல தமிழ்ச்சொற்களை எடுத்துக்காட்டியுள்ளார்.1 தமிழ்ச் சொற்கள் வடமொழியிற் சென்றபோது, முத்தா (முத்தா) மீனா (மீன்) என்பனபோலச் சிறிது வேறுபாடுகளை அடைந்தன. இவ்வாறு கலந்த பல சொற்கள் மேலும் மேலும் திரிந்து உருத்தெரியாவகை கரந்தனவாயினும், மொழி ஆராய்ச்சியில் அச் சொல்மூலங்கள் தமிழே என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வகைச் சொன்மூலங்கள் பலவற்றை யாழ்ப்பாணம், வண. சுவாமி ஞானப்பிரகாசர் வெளியிட்டுவரும் தமிழ் ஒப்பியல் அகராதியிற் காணலாகும்.

  ஐரோப்பிய ஆரியர் இந்து ஆரியர்களின் சமயங்கள் ஒரே வகையினவல்ல. இப்போதைய அல்லது வேதகால ஆரியமதத்திலிருந்து இந்து ஐரோப்பியருக்குப் பொதுவான சமயக் கொள்கைகளை கழித்துப் பார்ப்பின் எஞ்சி நிற்பன தமிழர்களுடையனவே. இம்முறையைக்கொண்டு வேதகாலத்திலேயே தமிழர் சமயக்கொள்கைகள் ஆரியமதத்தைத் தன் வண்ணமாகத் திரிக்கத்தலைப்பட்டு விட்டன வென்பது தெளிதல்கூடும். மொகஞ்சொதரோ காலத்தில் தமிழருக்கு ஆலயங்களும் ஆலயக் கிரியைகளும் இருந்தன. ஆலயம்கட்டும் விதிகளையும் ஆலய வழிபாட்டையும் பற்றிக் (கிரியைகள்) கூறும் நூல்கள் ஆகமம் எனப்பட்டன. வேதங்களுள் ஆகமக் கொள்கைகள் (கிரியை முறைகள்) கலந்துள்ளனவென்று ஆராய்ச்சியாளர் கண்டுள்ளார்கள். ஆகமக் கொள்கைகள் வேதங்களில் முகிழ்த்து


1. At a time when characteristic Hindu idea did not develop among them. the Dravidian cults and Dravidian language began to influence their religion and that speech The Origin and development of the Bengali language. - P. 42 - S. K. Chatterji.