சொற்கள் திராவிட மொழியினின்று கடன்பெற்றவை என்று திரும்பலாம்"1 எனக் கூறியுள்ளார். திருமூலர் அருளிய திருமந்திரத்தில் சமயத்தொடர்பான சொற்கள் நிரம்பக் காணப்படுகின்றன. தாம் கூறும் ஞானங்கள் இத்தமிழ் உலகின் முன்னமே உள்ளன என்பதைத் "தமிழ்மண் டலமைந்தும் தாவிய ஞானம்" "செந்தமி ழாதி தெளிந்து வழிபடு-நந்தியிதனை நவமுரைத்தானே" எனப் பலவிடங்களிற் குறிப்பிட்டுள்ளார். திருமூலர் நூலில் வேதமென வருவது ஆரியமக்களின் பாடல்களெனத் தெரியவில்லை. வேதம் சனகாதி முனிவருக்கு இறைவனாற் கல்லால நீழலின்கீழிருந்து அறிவுறுத்தப்பட்டதென்பது, பண்டு தொட்டுள்ள தமிழ்மக்களின் ஐதீகம். இறைவன் மௌனமாயிருந்தே வேதத்தை அறிவுறுத்தார் என்பதனால் தமிழர் கூறும் மறை, பாடல்களும் பாடற் றொகுப்புகளுமன்று; தாயுமான அடிகளுக்கு மௌனதேசிகர் அருளியதுபோன்ற உபதேசம். தமிழரின் பண்டைச் சமயஞானங்களைக் கூறும் திருமந்திரத்தில் வந்துள்ள சமயச்சொற்கள் தமிழ் எனக்கொள்ளலாமெனத் தெரிகின்றது. சைவசித்தாந்தமென்பது தமிழரின் 1. The Dravidian names of things and operations connected with all these arts of peace are native and not foreign (i. e., borrowed from Sanskrit). The question has not yet been investigated, but on enquiry it will most probably turn out that many Sanskrit words connected with these arts were borrowed from the Dravidian. - Life in Ancient India - P. T. S. Iyengar. The language of the Rig Veda is as yet purely Aryan or Indo-European in its form, structure and spirit, but its phoneties is already affected by the Dravidian and it has already begun to borrow words from Dravidian and Kol. Among words of probable Dravida origin in the Rig Veda, the following may be noted-anu-particle; arani-rubbing wood for fire; kapi-monkey; karmara-smith; Kala-time, Kunda-Hole; Gana-Band; nana-several; nila-blue; Puspa-flower; Pujana-worship; Phala-fruit; Bija-seed; Mayura-peafowl; ratri-night; rupa-form - Ibid P. 42. |