வட இந்திய மக்கள் தனி ஆரியரே என்று கருதிவிடுதல்கூடாது. அவர்களிடையே நெருங்கிய திராவிடக் கலப்பு உண்டு. இதனால் அவர்களின் மொழியும் பழக்கவழக்கங்களும் மாறுபட்டன.1 மொகஞ்சொதரோத் தமிழரின் சமயம் ஹெரஸ் பாதிரியார் மொகஞ்சொதரோவிற் காணப்பட்ட ஆயிரத்தெண்ணூறு பட்டையங்களை நன்கு ஆராய்ந்தும், அவைகளில் எழுதப்பட்டவற்றை ஒலிமுறையில் வாசித்தும் அறிந்த உண்மைகள் சிலவற்றை மாதவெளியீடுகள் வாயிலாகப் புலப்படுத்தியுள்ளார். அவற்றின் சுருக்கமோ விரிவோ இதுகாறும் தமிழில் வெளிவந்தில. பம்பாய்ப் பல்கலைக்கழக வெளியீட்டில் (யூலாய்-1936) அவர் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றைச் சுருக்கி ஈண்டுத் தருகின்றோம். ஒரு பட்டையத்தில் "இறுவன் கொம்மின்னிர்" எனப் பொறிக்கப்பட்டிருக்கின்றது. (கடவுளின்) கொம்பு வாத்தியமூதும் மீனவர் என்பது இதன் பொருள். இன்னொரு பட்டையத்தில் "கோயில் எல்லாக் கடவுள் ஆண்" எனக் காணப்படுகின்றது. ஆலயத்திலுள்ள எல்லாக் கடவுளுக்கும் தலைவர் என்பது இதன் பொருள். 1. The Aryan population of north India is not therefore a pure race, but contains among others a strong Dravidian element. - Linguistic Survey of India Vol. IV, P. 278. "As for the causes of the changes that may be styled Prakritie economy of effort, progressive refinement, specially in courts and cities, softening influence of a semitropical climate, influence of speech and habits of Non-Aryan peoples who adopted the Aryan speech all these have been at work. - Introduction to Prakrit: Prof. Woolner. |