பக்கம் எண் :

218தமிழ் இந்தியா

தாய்க்கடவுள் மீன்கண்ணி எனப்படுகின்றார். மீன் கண்ணியே மீனாட்சி என இக்காலத்து மருவி வழங்குகின்றது போலும்.

  விடுகண், எண்மை, ஆண், கடவுள், பேர்ஆண், தாண்டவன் என்பன கடவுளின் பெயர்களாக மொகஞ்சொதரோ மக்களால் ஆளப்பட்டன. நாலு மரங்களின் இடையிலுள்ள தாண்டவன் என ஒரு பட்டையங் கூறுகின்றது.

  மொகஞ்சொதரொ மக்கள் இலிங்கத்தை வழிபட்டார்கள் என்பது ஐயமின்றி விளங்குகின்றது. மொகஞ்சொதரோ அரப்பா என்னுமிடங்களில் இவ்வகைக் கற்கள் பலகண்டெடுக்கப்பட்டன. மீனவர் இவ்வழிபாட்டை ஆரம்பத்தில் எதிர்த்தார்களெனத் தெரிகின்றது. மீனவர் பிற்காலத்தில் மச்சயர் எனப்பட்டனர். இலிங்கங்களாகிய கடவுளருக்கு வீடுகள் முதலிய மானியங்கள் விடப்பட்டிருந்தன.

  சுமேரிய மக்களின் மும்மூர்த்திகள் ஆண், அம்மா, என்லில் என்பன. தமிழரின் மும்மூர்த்திகள் ஆண், அம்மன், முருகன். அம்மன் மீன்கண்ணி எனப் பட்டையங்களிற் கூறப்பட்டுள்ளார். பாகம் பெண்ணாயுள்ள வடிவம் (அர்த்தநாரீசுர வடிவம்) காணப்படுகின்றது. இவ்வடிவம் சுமேரியாவிலுமுண்டு. கழனிகளின் கடவுள், இடிக்கடவுள், சாக்கடவுள், (யமன்), மீன் கடவுள் என்பன அக்கால மக்களால் வழிபடப்பட்டன. சூலங்கள் ஆலயங்களிலும் வீடுகளிலும் வைத்து வழிபடப்பட்டன. ஒரு பட்டையத்தில் பாம்பு மூன்று கண்ணுடையதாகக் கூறப்படுகிறது. சூலத்துக்குப் பதில் கோடரியும் நட்டு வழிபடப்பட்டது.

  சில பட்டையங்களில் மக்கள் கடவுளின் மூன்று கண்களையும் தியானித்தார்கள் எனக் கூறப்படுகின்றது. புனிதமுடைய கடவுள் திருஉருவங்கள்