பக்கம் எண் :

தமிழ் இந்தியா219

மீது தண்ணீர் அல்லது பால் தெளிக்கப்பட்டது. (அவ்வழக்கு இன்றும் காணப்படுகிறது). துதி பாடுதல், கடவுளின் பெயரை உச்சரித்தல், (செபித்தல்) நேர்த்திக்கடன் செய்தல் போன்ற வணக்கங்களும் இருந்தன. அரசன் உழவன் எனப்பட்டான். அரசனே ஆலயங்களில் ஐயராகவிருந்தான்.

  விருந்தே அக்கால விழாவாகத் தெரிகிறது. (பொங்கல், குருபூசை, சங்காபிடேகம், விழாக்கள் என்பவைகளில் இன்றும் மக்களுக்கு உணவு அளிக்கப்படுகின்றது.) ஒவ்வொரு கிராமத்திலும் வைத்து வழிபடப்பட்ட சூலம் அல்லது சூலத்தைத் தலையிலுடைய கடவுள் அடுத்த கிராமத்துக்குக் கொண்டுபோகப்பட்டது. அக்காலம் பெரிய விழாக்கள் கொண்டாடப்பட்டன. நகரத்தில் வீதிகள் சந்திக்குமிடத்தில் ஆலயங்கள் கட்டப்பட்டன. தென்னந்தோப்புகளின் மத்தியில் இலிங்கங்கள் வைத்து வழிபடப்பட்டன. வீடுகளிலும் சிறிய கோயில்கள் இருந்தன.

  இறந்தவர்களைச் சுடுதலும் புதைத்தலும் அக்கால வழக்கு. இறந்தபின் நியாயத் தீர்ப்பு நடப்பதாக மக்கள் நம்பினார்கள். ஞாயத்தீர்ப்பு என்பதற்குத் "தீர்ப்பு" என்னும் சொல் முத்திரைகளில் ஆளப்பட்டிருத்தல் நோக்கத்தக்கது.


இயல் - 8
இந்தியாவும் மேற்கு உலகமும்

  நோவா பேழை கட்டுதற்கு முன்பு எகிப்தியர் தமிழ்நாட்டுக்கு மரக்கலங்களிற் பயணஞ்செய்த வரலாறு அவர்களின் ஓவிய எழுத்து நூல்களிற் காணப்படுகின்றது. பண்டு நாட்டுக்குப் பயணஞ்செய்த கன்னு என்னும் மாலுமி கூறியிருப்பதன் விபரம் வருமாறு; "நான் சேபா என்னும் துறைமுகத்தை அடைந்தேன். யான் கொண்டுவரவேண்டிய பண்டங்கள் எல்லாம் கப்பலில் 
 


  பாதலத்தில் தொடங்கி மெம்பிஸில் முடிவடையுங்கோடு மொகஞ்சொதரோ காலத்துக்கு முன் தொடங்கி இருந்த வணிகப் பெருந்தரைப் பாதையைக் குறிப்பது. முசிரியில் தொடங்கி உரோமையில் முடிவடையும் பாதை உரோமர் காலத்திய வணிகக் கடல் வழி