பக்கம் எண் :

220தமிழ் இந்தியா

ஏற்றப்பட்டன. யான் எருதுகளையும் பசுக்களையும் ஆடுகளையும் பலி கொடுத்தேன். யான் பண்டு என்னும் பரிசுத்த நாட்டிலிருந்து அரசனுக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் கொண்டுவந்தேன்."

  கி. மு. 1600-ல் பண்டு தேசத்துக்குச் சென்ற இன்னொரு பயணத்தின் முழு விபரமும் ஓவிய எழுத்து நூல்களிற் காணப்படுகின்றது. அப்பொழுது இஸ்ரவேலர் எகிப்தில் மறியற்படுத்தப்பட்டிருந்தார்கள். அதன் விபரம் வருமாறு: "பதினொரு கப்பல்களில் பண்டுதேசத்தின் வியப்பு மிக்க பொருள்கள் ஏற்றப்பட்டன. அவை விலை உயர்ந்த மரங்கள் குங்குலியம்போன்ற மணப்பொருள்கள், மணமரங்கள், அமு என்னும் நாட்டிற் கிடைக்கும் பொன்னழுத்திய யானைத்தந்தம், கண்ணுக்குத் தீட்டும் மை, நாய்த்தலைக்குரங்கு, வேட்டைநாய், புலித்தோல், அந்நாட்டு மக்கள் குழந்தைகள் என்பன."

  எகிப்திய மொழியில் குரங்கையும் யானைத் தந்தத்தையும் குறிக்க சவு, எப் என்னும் சொற்கள் வழங்கின. இவை முறையே கவி இபம் என்னும் சொற்களின் திரிபு.1
வரலாற்றுக் காலத்திற்கு முன் தொட்டு இந்தியாவுக்கும் மேற்கு ஆசியாவுக்குமிடையில் மூன்று வணிகப் பெரும்பாதைகள் இருந்தன.


  1. The Egyptian world eb for the elephant must however, also be compared with the Hebrew Habim. It is curious that the ape is called Kafi in Egyptian Kapi in Sanskrit, Kuf in Hebrew and Cepus in Latin the Greek Kepos. - The Egyptians seem in these cases to have used Aryan names for both apes and Elephants. - Syrian Stone Lore. P. 180. The trade terms such as the names used in the time of Solomon for ivory apes and peacocks are Tamil; in other words they come from the Dravidian not a Sanskrit tongue. - Natives or Northern India P. 29. W. Crooke.