பக்கம் எண் :

தமிழ் இந்தியா221

இவற்றுள் மிக இலகுவானது சிந்துநதி முகத்துவாரத்திலிருந்து அராபியக் குடாக்கடல் வழியாக யூபிராதஸ் முகத்துவாரத்தை அடையும் கடற்பாதை. இன்னொன்று பாரசீகத்தினூடாகத் தரைவழியே செல்வது. செங்கடல் வழியாகச் செல்வது மற்றொன்று.

  சிந்துநதி முகத்துவாரத்துக்கும் யூபிராதஸ் பள்ளத்தாக்குகளுக்கும் இடையிலுள்ள வாணிகம் மிகத் தொன்மையுடையது. இவ்வாணிகத்தைக் குறித்தசெய்தி மித்தனி
(Mitanni) நாட்டையாண்ட கிதைதி அரசனின் பட்டையங்களிற் காணப்படுகின்றது. இப்பட்டையங்கள் கி. மு. 14-ம் நூற்றாண்டிற் பொறிக்கப்பட்டவை. அசுர்பாணிப்பாலின் (Assurbanipal) புத்தக நிலையத்தில் (கி. மு. 668-626) காணப்பட்ட சிந்து 1 என்னுஞ்சொல் இந்திய பஞ்சு என்னும் பொருளில் வழங்கப்பட்டுள்ளது. இச்சொல் மிகப் பழமையுடையது. இச்சொல் அக்கேடிய மொழியில் தாவர ஆடை என்னும் பொருளில் வழங்கிற்று. அசுர்பாணிப்பால் என்னும் அரசன் பெரும்பயிர்த்தொழில் புரிவோனாயிருந்தான். அவன் இந்தியாவினின்றும் கம்பளி காய்க்கும் மரங்களைப் பெற்றான். மேற்கு


1. Prof. A. H. Sayce in his Hibbert lectures (1887 pp. 137-138) observes that in an ancient list of Babylonian clothing sindu is mentioned as a name of muslin, or woven cloth and that it corresponds Sadin of the Old testament and the......of Greeks. The learned Prof. has further stated that this muslin or woven cloth must have been called isndhu by the Accadians (Chaldians) because it was exported from the banks of Indus (sindhu) to Chaldia in those days (e. g. the word calico from Calicut). He has further noted that this intercourse between the two countries must have been by sea, for the word has passed by land i.e., through Persia the initial of the word would have become he in Persian mouths. - Commemorative essays presented to Sir R. G. Bhandarkar, 1917.