பக்கம் எண் :

222தமிழ் இந்தியா

ஆசியாவில் நடைபெற்ற பஞ்சு வியாபாரம் மிகப் பழமையுடையது. கிரேக்கர் முதல்முதல் இந்தியரைப்பற்றி அறியவந்தபோது அவர்கள் மரத்திற் காய்க்கும் கம்பளியை உடுத்திருந்தார்கள். இருக்கு வேதத்தில் இரவும் பகலும் இரண்டு நெசவு செய்யும் பெண்களாக உவமிக்கப்பட்டுள்ளன.1 முகயரிலே (Mugheir-ur of Chaldees) திங்கட் கடவுளின் ஆலயத்திலும் நேபுசண் நிசரின் (கி. மு. 6-ம் நூற்றாண்டு) அரண்மனையிலும் இந்தியத் தேக்கமரத் துண்டுகள் கண்டு எடுக்கப்பட்டன. தேக்கு, கருங்காலி, சந்தனம் முதலிய மரங்கள் பர்காசா (Bargaza) புறூச் எனப்பட்ட இந்தயாவின் மேற்குக்கரையிலுள்ள துறைமுகத்திலிருந்து தைகிரசுக்கு அனுப்பப்பட்டன. இவ்வாணிகம் கி. பி. 2-ம் நூற்றாண்டு வரையில் நடைபெற்றது.

  சலமன் நேசரின்
(Salamanesar iii கி. மு. 860) தூணில் குரங்கு, இந்திய யானை, பக்தீரிய (பரசீக) ஒட்டகம் முதலிய விலங்குகளின்



  1. Dravidian speaking races of India traded with the ancient Chaldians before the Vedic language found its way into India. Indian teak was found in the ruins of ofur (now Mugheir) and must have reached from India in the 4th millennium B. C. when it was the Seapor of Babylon and the Capital of Sumerian kings (sayce Hib. Lect. P. 137). The gold and spices mentioned in Assyrian inscriptions of the XIV Cen. B. C. were probably exported from India, the only Country so far as we know they were produced. - Life in Ancient India - P.T.S. Aiyengar.

  With regard to trade of these times it must be noted that the early children inscriptions speak of ships of ur, the capital city: and that from at least the 14th century B. C. Gold, Silks, pearls etc. had been passing from India to Assyrian monarchy carried on both by caravans on land and by the coasting trade by sea. There was also active trade with China, on the obelisk of Salamanezar are represented Indian Elephants and apes. - Historical inscriptions of South India, Madras University.