பக்கம் எண் :

தமிழ் இந்தியா223

உருவங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. பவேரு சாதகம் (கி. மு. 500) இந்திய வணிகர் பவேருக்கு (பபிலோன்) கடல்வழியாகச் சென்ற வரலாற்றைக் கூறுகின்றது. அங்குப் பறவைகள் அருமை. இந்திய வணிகர் முதன்முறை ஒரு காகத்தைக் கொண்டு சென்றனர். அந்நாட்டு மக்கள் அதன் அழகைப் பார்த்து அதிகம் வியந்தார்கள். அடுத்த பயணத்தில் அவ்வணிகர் நன்றாக ஆடும் மயில் ஒன்றைக்கொண்டு சென்றனர். மயிலின் அழகாற் கவரப்பட்ட அந்நாட்டுமக்கள் காக்கையின் அழகைக் கொண்டாடினார்களல்லர்.

  பண்டைக்காலத்தில் இந்தியர் அனுபவம் வாய்ந்த கடலோடிகளாக விருந்தனர். பழைய இந்திய இலக்கியங்கள் இந்தியரின் துணிகரமான கப்பற் பயணங்களைப் பற்றிக் கூறுகின்றன. பிற்காலங்களில் மத்திய தரைகளில் ஓடிய கப்பல்களைவிடப் பெரிய கப்பல்களை இந்தியர் கட்டினர். கி. மு. 6-ம் நூற்றாண்டில் கலிங்க நாட்டினின்றும் இலங்கைக்குச்சென்ற விசய இராசனின் கப்பல் 700 மக்களை ஏற்றிச்சென்றது. சாதகக் கதைகள் முந்நூறு முதல் எழுநூறு பேரை ஏற்றிச்செல்லக்கூடிய மரக்கலங்களைப்பற்றிக் கூறுகின்றன. கிழக்குக் கரையிலுள்ள பெரிய துறைமுகங்கள் சம்பா, தாமிரலிப்தி என்பன; மேற்கிலுள்ள பறுகாசா சுப்பிரா என்பன. விநோதமான பறவைகள், சிந்துக்குதிரைகள், தந்தம், ஆடைகள், அணிகலன்கள், பொன், வெள்ளி முதலியன இத்துறைமுகங்களினின்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. அக்கால மக்கள் கடல்வழியாக அயல்நாடுகளுக்குச் செல்வது சாதாரண நிகழ்ச்சி. கெவெட்டுசூத்த
(Keveddhusutta) என்னும் நூலில் கரைதெரியாத கடலில் கரையைக் காட்டும் பறவைகளுடன் வணிகர் பயணம்செய்த வரலாறு கூறப்பட்டுள்ளது. பறவைகள்