இந்தியாவுக்கும் செமத்திய மக்களுக்குமிடையிலுள்ள வணிகம் பெரும்பாலும் கடல்வழியாக நடைபெற்றது. பழைய ஆசிய நாகரிகம் இந்தியா, சீனா, இலங்கை, மத்தியதரைநாடுகள் வரையில் பரந்து காணப்பட்டது. இவ்விடங்களிற் கிடைத்த பழையமண்டபங்கள், உலோகப் பொருள்கள், நெசவுப்பொருள்கள் என்பன ஒரேவகையின. கிழக்கு மத்தியதரை, நாகரிக உலகின் மேற்கு எல்லையாக ஒருபோது இருந்தது. கழுதை ஒட்டகம் பொதிமாடு என்பவைகளில் பண்டங்களை ஏற்றிச்செல்லும் வணிகர் கூட்டத்தினர், மிக முற்காலந்தொட்டு இந்தியா, சீனா, மேற்கு ஆசியா என்பவைகளைத் தொடுத்திருந்த பெரும்பாதையாற் பிரயாணஞ் செய்தனர். ஒக்சஸ் (Oxus) ஆற்றிலிருந்து கஸ்பியன் கடல்வரையில் பண்டங்கள் கட்டுமரங்கள் வாயிலாகக் கொண்டுபோகப்பட்டன. இந்தியத் துறைமுகங்களினின்றும் சரக்குகள் ஏடின் துறைமுகத்துக்குச் சென்றன. சலமன் அரசன் பொனீசிய அரசனின் நட்பைப்பெற்றுப் பொனீசிய மாலுமிகளின் உதவியால் பொன், வெள்ளி, யானைத்தந்தம், வாலில்லாக் குரங்கு, மயில், அகில், இரத்தினக்கற்கள் முதலியவைகளை இந்தியாவினின்றும் பெற்றான். ஒபிர் பொன்னுக்குப் பேர்போனது; ஆகவே, |