பக்கம் எண் :

226தமிழ் இந்தியா

எபிரேயத்தில் ஒபிர்ப்பொன் என்னும் முதுமொழி உண்டாயிற்று. ஒபிர் என்பது இந்தியாவிலுள்ளதென்பது உடனே தெளிவாகின்றது. யூதர் நூல்களில் இந்தியமொழிச் சொற்கள் பல காணப்படுகின்றன.

  பண்டைக் கிரேக்கப் புலவராகிய ஹோமர் ஆப்பிரிக்க எதியோப்பியர், கிழக்கு எதியோப்பியர் என்னும் இரு மக்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறிய கிழக்கு எதியோப்பியர் என்பது திராவிடரைக் குறிக்கும். ஹோமர் காலத்தில் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தனவென்றும், இந்துமாக்கடல், மத்தியதரைக்கடல் இருப்பதுபோல முன்பு இடையில் இருந்ததென்றும் நம்பப்பட்டது. எபிரேயத்திலும் சமக்கிருதத்திலும் கிரேக்கரைக் குறிக்க வழங்கிய சொல் யவன என்பது.

   கெரதோதசு கி. மு. 484-ல் பிறந்தார். இவர் தனது நூலில் இந்தியரைப்பற்றிக் கூறியுள்ளார். அவர் கூறுவது "இந்திய மக்கள் வெவ்வேறு மொழிகளை வழங்கும் பல சாதியினராக வாழ்கின்றனர். தெற்கே யிருப்போர் எதியோப்பியரைப் போன்றோர். அங்கு ஓர் உயிரையுங் கொல்லாத ஒரு கூட்டத்தினரும் காணப்படுகின்றனர். அவர்கள் தானியங்களையும் தாவரங்களையும் உணவாகக் கொள்வர்."

  "இந்தியாவில் ஒருவகை எறும்புகள் உண்டு. இவை புற்றெடுக்கும்போது வெளியே தள்ளும் மணலோடு பொன்தூளும் வெளியே வருகின்றது. அவ்வெறும்புகள் நாயிற் சிறியனவும் நரியிற் பெரியனவுமாய் இருக்கும். அவை பொன்னைக் காவல் காத்துக்கொண்டிருக்கின்றன. நடுப்பகலில் அவை புற்றுக்குள் இறங்கிச்சென்று நித்திரை கொள்ளுகின்றன. இந்தியர் பெண்