ஒட்டகங்களில்சென்று பொன்தூள்களைச் சாக்குகளில் கட்டிக்கொண்டு விரைந்து செல்கின்றனர். அவ்வெறும்புகளிற் சிலவற்றைப் பாரசீக அரசன் பிடித்து வைத்திருக்கின்றான். இக்கதை, சமக்கிருதத்திலுள்ள பப்புலிக்கா (Paippilika) என்னும் எறும்புத் தங்கம் என்னும் பொருள்தரும் சொல்லினின்றும் முளைத்ததாயிருக்கலாம். அக்காலத்தில் ததிஸ்தான ் (Dardistan) என்னுமிடத்தில் தங்கம் அரிக்கப்பட்டது. கெரதோதசு இந்தியப் பஞ்சு கம்பளியிலும் நயமானது என்றும், இந்திய மக்கள் அதனால் ஆடை நெய்தார்கள் என்றும் கூறியுள்ளார். கெரதோதசுவுக்குப்பின் இந்தியாவைப்பற்றிக் கூறியவர் கெற்சியஸ் (Ktesias) என்னும் கிரேக்கர் (கி. மு. 416) இவர் இந்தியாவைப்பற்றிய பிறர் வாயிலாக அறிந்தவைகளைத் திரட்டி இந்திக்கா (Indika) என்னும் நூல் செய்துள்ளார். இவர் கூறியிருப்பன பெரும்பாலும் கட்டுக்கதை போல்வன. இவர் கருவாப்பட்டையைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். இவர் அதனை காருப்பு ( Karuppu) எனக் கூறியுள்ளார். இந்தியாவில் நஞ்சைஅறியும் புறாவும் காயத்தை ஆற்றும் கல்லும் இருந்தனவென்றும், அங்கு ஒற்றைக்கொம்பு முளைத்த கழுதைகளும் குதிரைகளும் உண்டு என்றும், அக்கொம்புகளிற் செய்த சிமிழ்களிற் பானஞ்செய்யின் விடத்தின்வலிமை தலைகாட்ட முடியாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். (காக்கை நஞ்சை அறியும் இயல்பினதென்றும், காண்டாமிருகத்தின் கொம்பில்ஊற்றி உண்ணும் பானங்களில் நஞ்சுகலந்திருப்பினும் தீமைநேராதென்றும் இன்றும் இந்தியமக்கள் நம்பி வருகின்றனர்.) |