பக்கம் எண் :

228தமிழ் இந்தியா

பாணினிமுனிவர் பெண்பால்போன்ற யவனி என்னும் சொல்லைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு உரையெழுதிய கார்த்தியாயனர் அது யவன இலிபியைக் குறிக்குமென வரைந்துள்ளார்.

   அலக்சாந்தர் கி. மு. 329-ல் இந்தியாமீது படைஎடுத்துவந்தார். கி. மு. 315-ல் பஞ்சாப்பில் கிரேக்கர் ஆட்சி ஒழிந்தது. அதன்மேலும் கிரேக்க இந்தியர் கலப்பிற்றோன்றிய மக்கள்பலர் பஞ்சாப்பிற் காணப்பட்டார்கள். இவர்கள் காலத்தில் அங்குள்ள மக்களோடு கலந்து மறைந்துவிட்டனர். சந்திரகுப்தஅரசனே கிரேக்கப் பெண்ணை மணந்திருந்தான். வட இந்தியாவில் சகர் எனப்படும் ஸ்கித்தியர் ஆட்சி கி. மு. 93-ல் தொடங்கியது.

  1 தாலமி பிளாபிப்ஸ் (கி. மு. 321) காலத்தில் இந்திய வேட்டை நாய்களும், இந்தியப்பசுமாடுகளும் எகிப்தில் காணப்பட்டன. இந்தியப் பெண்களும் அங்குக் காணப்பட்டனர். இந்திய மணப்பண்டங்கள் ஒட்டகங்களிலேற்றிக்கொண்டு போகப்பட்டன.

   பெரிபுளுஸ் என்னும்நூல் (கி. மு. 60) இந்தியாவுக்கும் எகிப்துக்கும் வாணிகம் நேராக நடக்கவில்லையென்றும், அக்கால வணிகர் இந்தியாவுக்கு நேரே பயணஞ்செய்யத் துணியாமையால் எயுடாமன்
(Eudaemon) என்னுமிடத்திற் சந்தித்தார்களென்றும், அலக்சாந்திரியாவைப்போல எயுடாமன் அக்கால வாணிப நடு இடமாயிருந்ததென்றும் கூறியுள்ளார்.


1. Pliny published his geography in A. D. 77. Periplus of Erythean sea was written in the 1st century A. D. probably A. D. 60. but not later than 80 A. D. Ptolemy wrote his geography about A. D. 150. The Peutingerian Tables were composed in A. D. 222. - Beginnings of South Indian History.