சீனாவிலிருந்து பட்டும், இந்தியத் துறைமுகங்களிலிருந்து நல்ல மசிலின் ஆடையும், அணிகலன்களும், மரகதம், முத்து, மணச்சரக்கு முதலியனவும் உரோமுக்குச் சென்றன. மருத்துச்சரக்கும் மணப்பொருள்களும் நல்ல விலைக்கு விற்கப்பட்டன. மிளகுக்கு மானம் இருந்தது. பிளினி காலத்தில் உரோமில் ஒரு இராத்தல் மிளகின் விலை 15 டனாரி (Denari). நடுக்காலம் வரையில் மிளகு மேல்நாடுகளில் உயர்ந்த வாழ்க்கைப் பொருள்களில் ஒன்றாக இருந்து வந்தது. 15-ம் நூற்றாண்டில் ஒரு இராத்தல் மிளகின்விலை இரண்டு சிலின். அலாரிக் (Alaric) என்னும் கிரேக்கன் உரோம் நகர்மீது தான் இட்ட முற்றுகையை எடுப்பதற்குக் கேட்ட பொருள்களுள் 3000 இராத்தல் மிளகும் ஒன்று எனக் கிபன் (Gibbon) என்பார் கூறியுள்ளார். பிளினி என்பார் உரோமரின் ஆடம்பர வாழ்க்கையால் இந்தியாவுக்கு மிகுதியாகப் பணம் செல்வதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நாணயப் புழக்கம் குறைவு. முதல் ஐந்து உரோமைச் சக்கரவர்த்திகள் கால நாணயங்கள் ஏராளமாக இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ளன. நிரோ (Niro) காலத்தில் இந்தியாவினின்றும் உரோமுக்குச்சென்ற உயர்தர வாழ்க்கைப் பொருள்களின் அளவு உச்சநிலை அடைந்தது. இதற்குப்பின் அங்கு நேர்ந்த உள்நாட்டுக் குழப்பங்களால் அவ்வாணிகம் குறைந்துவிட்டது. உரோமை அரசனின் 612 பொன் நாணயங்களும் 1187 வெள்ளி நாணயங்களும் இந்தியாவில் நிலத்தின்கீழ் இருந்து கிண்டி எடுக்கப்பட்டன. இவை பானை நிரம்பிய, ஆட்சுமையுள்ள என்று குறிக்கப்பட்ட நாணயங்களைவிட வேறானவை. இவைகளுட் பெரும்பாலன ஆகஸ்தஸ் காலத்தன. திபேரியஸ் பிளினி (Tiberious-Pliny) என்பார் இந்தியா, சீனா, அராபியா முதலிய நாடுகள் ஓர் |