ஆண்டில் நூறுகோடி செஸ்ரர்செஸ் தங்கத்தைக் கவர்ந்துகொள்கின்றன எனக் கூறியுள்ளார். இத்தொகை 11,00,000 தங்கநாணயங்களுக்குச் சரி எனக் கணக்கிடப்படுகின்றது. இதிற் பாதி இந்தியாவை அடைந்தது. அக்கால உரோமர் இறந்தவரின் உடல்மீது ஏராளமான மணச் சரக்குகளைக் கொட்டி எரித்தார்கள். நிரோஅரசன் (கி. பி. 66) பொபோகா (Popoka) வின் உடல்மீது கொட்டிஎரித்த மணச்சரக்கு அராபியாவிற் கிடைக்கும் ஓராண்டு விளைவுக்கு நேர் என்று கணக்கிடப்பட்டது. இவ்வீண் ஆடம்பரம் இந்தியா அராபியா ஏடின் முதலிய நாடுகளுக்கு அதிக வருவாயைக் கொடுத்தது. ஸ்ராபோ என்பவர் ஆகஸ்தஸ் காலத்தவர். இவர் ஆசிய கிரேக்கர். " மெஒஸ் கோமாஸ் " (Myos Homas) என்னும் மத்தியதரைத் தீவுகளுக்கு அருகாமையில் இந்தியாவுக்குப் பயணப்பட்டுச் செல்லும் 120 கப்பல்களை யான் பார்த்தேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார். குளோடியஸ் அரசன் காலத்தில் இலங்கைக்கு அருகே குதிரைமுனைக்கு அணித்தில் கிரேக்க கப்பல் ஒன்று உடைந்துபோயிற்று. அதினின்று தப்பி மீண்டவர்களிடம் கேட்டறிந்தவற்றை ஆதாரமாகக்கொண்டு பிளினி இலங்கைப்படம் வரைந்தார். அவர் இந்தியநாட்டின் படமொன்றும் வரைந்துள்ளார். அவர் கி. பி. 150 வரையில் வாழ்ந்தார். பாண்டியஅரசன் ஒருவன் ஆகஸ்தஸ் அரசனிடம் தூதனுப்பினான்; (கி. மு. 21) இலங்கை அரசனும் தூதனுப்பியிருந்தான். கிப்பாலுஸ் (Hippalus) என்பார் கப்பல்கள் இந்தியாவுக்குப் பாயெடுத்துச் செல்வதற்கேற்ற பருவக்காற்றைக் |