பக்கம் எண் :

தமிழ் இந்தியா231

கண்டுபிடித்தார். முசிறியில் கடற்கொள்ளைக்காரர்1 மிகுதியாக இருந்தமையின், முசிறியில் இறங்குவதிலும் பறக்கை (Barake) யில் இறங்குவதை வணிகர் விரும்பினார்கள் எனப் பிளினி கூறியுள்ளார். பறக்கை மிளகு வர்த்தகத்திற்குப் பேர்போனது. மிளகு விளையும் நாடுகளின் நடுவிலுள்ளது தெல்லிச்சேரி. பரகாசாவிலிருந்து சந்தனக்கட்டை தேக்கு கருங்காலி முதலிய இந்திய மரங்கள் அனுப்பப்பட்டன என்று பெரிபுளுஸ ் என்னும் நூல் கூறுகின்றது. சிந்துநதி முகத்துவாரத்திலிருந்து இலைசியம் என்னும் ஒருவகை வாசனைச் சரக்கு, இரத்தினக்கல், நீலக்கல், தோல், சீனப்பட்டு முதலியன ஏற்றுமதியாயின. பிற்காலங்களில் பட்டு தரைவழியாக உரோமுக்குக் கொண்டுபோகப்பட்டது. உரோமர் ஆரம்பத்தில் பட்டு எப்படியுண்டாகிறதென்று அறியாதிருந்தார்கள். அவர்கள் அது மரத்தில் காய்ப்பது என நம்பிவந்தனர். பர்காசா என்பது இக்காலம் புறூச் (Brooch) என அறியப்படும். தமிழகம் உரோமை ஆசிரியர்களால் தமிறிகே (Damirike) என வழங்கப்பட்டது. தென்னிந்திய


1. The following accounts from Marco Polo of this coast is worth noticing! "There go forth every year more than a hundred corsair vessels and cruise. These pirates take with Them their wives and children and stay out the whole summer. Their method is to go in fleets of twenty or thirty of these pirate vessels to-gether, and then they form what they call a sea cordon, that is that they drop off till there is an interval of five to six miles between ship and ship, so that they cover something like a hundred miles of sea and no merchant ship can escape them. For when any one corsair sights a vessel a signal is made by fire or smoke, and then the whole of them make for this and seize the merchants and plunder them......But now the merchants are aware of this and go so well manned and armed, and with such great ships and they do not fear the corsairs. Still mishaps do befall them at times. - The Beginings of South Indian History.்