துறைமுகங்களுட் சிறந்தது முசிறி. இது இப்பொழுது கரங்கனூர் என வழங்கும். முசிறியில் அகஸ்தஸ் அரசனுக்கு ஆலயம் ஒன்று இருந்ததெனப் பெதுருங்கேரியர் அட்டவணை (கி. பி. 222) கூறுகின்றது. யவனவணிகர் ஆடிமாதத்தில் வந்து மார்கழி மாதத்திற் புறப்பட்டார்கள். குமரி முனையில் குமரித் தெய்வத்தின் ஆலயம் இருந்தமையைப் பெதுருங்கேரியரின் அட்டவணை குறிப்பிட்டுள்ளது. கிறிஸ்ரோஸ்ரம் (Dio-Chrisrostam கி. பி. 117) என்பார் இந்தியவணிகரைத் தாம் அலக்சாந்திரியாவிற் சந்தித்தமையைக் குறிப்பிட்டுள்ளார்.1 பரகாசாத் துறைமுகத்திலே (புறூச்) அடிக்கடி கிரேக்கப்பெண்கள் இறக்குமதி செய்யப்பட்டார்கள். இந்தியஅரசரின் அரண்மனைகளில் யவனப்பெண்கள் இருந்தார்கள்; சகுந்தலை நாடகத்தில் இவ்வாறு காணப்படுகின்றது. தென்னிந்தியாவிலே அரசனின் மெய்காப்பாளர் ஊமராகிய மிலேச்சராயிருந்தனர். பரதர் செய்த நாட்டிய சாத்திரத்தில் அரங்கில் ஒரே முறையில் தோற்றக்கூடிய நடிகரின் கூடியஎண் ஐந்து என வரையறுக்கப்பட்டுள்ளது. கிரேக்கநாடகங்களிற்போல இந்தியநாடகங்களிலும் பயங்கரமான அல்லது பார்ப்பதற்கு இன்பம் அளியாத காட்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இந்திய 1. The greatest achievement of Dravidians was the art of navigation. The Indian ship was very like Egyptian as we see in a fifth dynasty painting, a long and wall sided vessel with the stem and stern highly raised, and had oars arranged in hanks. The Dravidian paddle was round not spade like in form as in ancient China, or very long as in ancient Egypt. There are native words in the Dravidian languages for the oar, sail, mast and anchor-Indian culture through ages- S. V. Venkateswara. |