பக்கம் எண் :

தமிழ் இந்தியா233

நாடகங்களில் யவனிகா என்னும் திரைச்சீலை பயன்படுத்தப்பட்டது. யவனி என்னும் கிரேக்கப்பெண்கள் அரசர் அல்லது அரசகுடும்பத்தினரின் பரிவாரங்களாகவிருந்தனர். திரைச்சீலை கிரேக்கரைப் பார்த்துச் செய்யப்பட்டதன்று. கிரேக்கர் திரைச்சீலையைப் பயன்படுத்தவில்லை.
  சாதகக் கதைகள் எழுதப்பட்ட காலம் முதல் இந்திய நாட்டுக் கதைகள் மேல்நாடுகளுக்குச்சென்று வழங்கியமைக்குச் சான்றுகளுண்டு.

  உரோமன் வர்த்தகப் பாதுகாப்பின்பொருட்டு இரண்டு உரோமைப் பட்டாளங்கள் முசிறியில் நிறுத்தப்பட்டிருந்தனவென்று பெதுருங்கேரியரின் அட்டவணை என்னும் நூலிற் கூறப்பட்டுள்ளது. பிளினிஎன்பவர் உரோமை அணங்குகளின் ஆடம்பர வாழ்க்கையைப்பற்றி எழுதியிருப்பது பின்வருமாறு:

  1எங்கள் நாட்டுப் பெண்கள் கைவிரல்களில் அல்லது காதில் இரண்டு அல்லது மூன்று முத்துக்களை கட்டித் தொங்கவிடுகிறார்கள். அவை ஒன்றோடு ஒன்று முட்டி அசைவதைக்கண்டு அவர்கள் மகிழ்கின்றனர். வறியவர்கள் தாமும் முத்துக்களை அணிகின்றனர்! செருப்புகளும் அதன்வார்களும் முத்துக்களால் அலங்கரிக்கப்படுகின்றன. முத்தை அணிவது மாத்திரமல்லாமல் அவர்கள் முத்தின்மீது மிதித்தும் நடக்கிறார்கள். ஒருபோது


  1. Pliny says Our ladies glory in hanging pearls suspended from their fingers, two or three of them hangling from their ears, delighted even with the rattling of the pearls as they knock against each other; and now at the present time the poor classes are even affecting them. They pat them on their feet and that not only on the laces of their sandals but all ever the shoes. - Beginnings of South Indian History.