பக்கம் எண் :

234தமிழ் இந்தியா

யான் கயஸ் (Caius) சக்ரவர்த்தியின் மனைவியைப் பார்த்தேன். யான் பார்த்த நேரம் விழாக்காலம் அல்லது பரிசுத்தமான கிரியைகளைப் புரியும் நேரமன்று. அவள் அணிந்திருந்த முத்துக்களும் இரத்தினக் கற்களும் அவள் தலைமீது பந்திபந்தியாகக் கிடந்து ஒளிவிட்டன. கூந்தல்மீதும், சூடியிருந்த பூமாலைகளிலும், காதுகளிலும், கழுத்திலும், கழுத்து மாலைகளிலும் கைவிரல்களிலும் அவள் அணிந்திருந்த முத்து பவளம் என்பவைகளின் பெறுமதி 40,000,000 செஸ்ரர்செஸ் (Sesterces). அவைகளின் பெறுமதி அத்தொகை என்று உறுதிப்படுத்துவதற்குள்ள பத்திரங்கள் அவளிடம் இருந்தன. அவை பிறரால் வெகுமதி அளிக்கப்பட்டனவல்ல; ஆனால் நாட்டுமக்களின் பணத்தைக்கொண்டு வாங்கித் தலைமுறை தலைமுறையாக அணியப்பட்டு வருவன. மக்களைக் கொள்ளையிடும் முறை இவ்வாறிருக்கின்றது. லலியாபோலினா என்பவளை மூடியிருந்த நான்குகோடி செஸ்ரர்செஸ் பெறுமதியுள்ள அணிகலன்களின் வெளிச்சத்தில் அவள் பேர்த்தியைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது.

  ஆண்டில் 55,000,000 செஸ்ரர்செஸ்சை (486,979 தங்க நாணயம்) இந்தியா கவர்ந்து கொள்ளுகிறதென்றும் இந்தியாவினின்றும் வாங்கப்பட்ட பொருள்கள் உரோமில் நூறுமடங்கு அதிகவிலைக்கு விற்கப்பட்டனவென்றும் அவர் கூறியுள்ளார்.

  யூலியர் சீகர், புறுத்தசின்
(Brutus) தாயாகிய சேவிலியா (Servilia) என்பவளுக்கு ஒரு முத்தை வெகுமதியாக அளித்தார். அதன் பெருமதி 47,457 தங்கநாணயம் (பவுன்). கிளியபத்திரா என்னும் எகிப்திய இராணி காதில் அணிந்திருந்த முத்துக்கடுக்கன்களின் விலை 151,450 தங்க நாணயம்.