பெரிப்புளுஸ் என்னும் நூல் இந்திய மேல்நாட்டு வாணிகத்தைப்பற்றிக் கூறுவது பின்வருமாறு: இந்தியாவில் மிளகும் முத்தும் அதிகம் வாங்கப்படுகின்றன. தந்தமும், சிலந்திவலை1 என உரோமரால் வாங்கப்பட்ட பட்டும், ஸ்பைக்நாட் (Spikenard) எனப்பட்ட மணப்பொருளும், கங்கை முகத்துவாரத்தில் விலைக்குக் கிடைத்தன. மலைப்பாத்திரம் (Malabothram) இதற்குக் கிழக்கேயுள்ள நாடுகளிற் கிடைத்தது. எல்லாவகைப் பளிங்குக் கற்களும், இரத்தினக் கற்களும், பவளங்களும் ஆமையோடும் தமிழகத்துக்கு அப்பாலுள்ள இலங்கைத் தீவினின்றும் வாங்கப்பட்டன. முசிறித் துறைமுகத்தில் மலைப்பாத்திரம், மிளகு என்பவைகளை வாங்கி அனுப்புவதற்கேற்ற வசதிகள் உண்டு. வணிகர் இவைகளையும் பிற மணப்பொருள்களையும் இங்குக் கொண்டுவருகின்றனர். இன்னும் இங்கு இறக்குமதியாகும் பொருள்கள் நிறக்கற்கள், பவளம், படிகம், பித்தளை, ஈயம், மது (Wine), சாதிலிங்கம், ஆடை, பாஷாணம் (Arsenic) முதலியன. முத்துக் குளிப்பைப்பற்றிக் கூறுமிடத்துக் கொலைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களே முத்துக் குறிப்பிற் பயன்படுத்தப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அக்காலத்தே வியாபாரத்தின் பொருட்டு வந்த கிரேக்கரும் பிறநாட்டு மக்களும் மதுரை, புகார் போன்ற நகரங்களிற்றங்கி வாழ்ந்தார்கள். இவர்கள் 1. Apart from the complaints of Petronius that fashionable Roman ladies exposed their charms much too immodestly by clothing in the "web of woven wind," as he called the muslins imported from India. Pliny says that India drained the Roman empire annually to the extent of 55,000,000 Sesterces, equal to L 486,979 sending in return goods which sold at hundred times their value in India. He also says in another place, "This is the price we pay for our luxuries and our Woman". Ibid. |