பப்போயி (Pappoe) என்பவரின் சவத்தின்மீது ஒருநாட்டில் ஓராண்டில் விளைவாகும் மணப்பொருள் அவ்வளவு கொட்டி எரித்தார். இறந்தவர்கள் மீது கொட்டி எரிக்கப்படும் மணப்பொருள்களையும், தெய்வங்களுக்கு எரிக்கப்படும் அவ்வகைப் பொருளையும் ஒப்பிடுமிடத்துத் தெய்வங்ளுக்கு எரிக்கப்படுவது தானிய நிறைதானும் இல்லை எனப் பிளினி என்பவர் கூறியுள்ளார். அயுரேலியன் (Aurelian) காலம் முதல் பட்டாடைகள் உரோமில் பொன்னுக்குச் சரியாக நிறுத்து விற்கப்பட்டன. இந்திய மிளகு வாணிகம் தொன்மைதொட்டு இந்தியாவினின்றும் மிளகு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டது. கி. பி. 47 வரையில் இவ்வாணிகம் மும்மரமாக நடைபெற்றது. அக்காலத்துச் செங்கடல் வழியாக இந்தியாவுக்கும் அலக்சாந்திரியாவுக்கு மிடையில் மரக்கலப் போக்குவரத்து இருந்தது. இந்திய அராபிய வியாபாரிகள் பருவக்காற்றுக் காலங்களை நன்கு அறிந்து கப்பற்பயணஞ் செய்தனர். செங்கடல் முகத்துவாரத்திலுள்ள ஒசிலிஸ் (Ocells) என்னும் பட்டினத்திலிருந்து பாயெடுத்த கப்பல்கள் துடுப்புகளால் ஓட்டப்பட்டு முசிறிப் பட்டினத்தை நாற்பது நாட்களில் அடைந்தன. இவ்வாறு அலக்சாந்திரியா வழியாக இந்தியாவுக்கும் உரோமைக்குமிடையில் கி. பி. 215 வரையும் இவ்வாணிகம் மும்முரமாக நடைபெற்றது. கிழக்கிலிருந்து உரோமுக்குச் சென்ற பொருள்களுள் முக்காற்பகுதி மிளகு. அக்கால வாணிபத்திற்குத் தேவைப்பட்ட மிளகு முழுமையும் மலையாளக் கரையிலிருந்து சென்றது. மிகப் பழங்காலந்தொட்டு மிளகு |