போர்த்துக்கேயன் கள்ளிக்கோட்டையை 1498-ம் ஆண்டு அடைந்தான். 16-ம் நூற்றாண்டளவில் டச்சுக்காரர் ஐரோப்பாவில் மிளகு வியாபாரத்தைக் கைப்பற்றினர். அக்காலத்தில் ஓர் இராத்தல் மிளகின் விலை மூன்று சிவின்; முன் ஆறு சிவின் வரையிலிருந்தது. இதனால் இலண்டன் வியாபாரிகள் கிளர்ச்சி கொண்டார்கள். சிலர் எலிசபெத் இராணியிடம் உத்தரவுபெற்றுக் கிழக்கு நாடுகளுடன் வியாபாரஞ் செய்யப் புறப்பட்டனர். அவர்கள் கிழக்கே அரசுகளைக் கோலினர். இயல் 9 மொழி அவர்கள் தம் எண்ணங்களைப் பிறர்க்குணர்த்த விழைகின்றனர். அப்பொழுது மொழி உண்டாகின்றது. ஆதியில் மக்கள் ஊமரும் செவிடரும் பேசுவதுபோலச் சாடைகளாலும் சைகைகளாலும் முகக்குறிகளாலும் பேசினர். இது நடிப்பு முறையில் உள்ள பேச்சு. இம்முறையிலிருந்தே நாடகத்தமிழ் வளர்ச்சியுற்றது. மக்களைச் சூழ்ந்து பலவகை இயற்கைப்பொருள்களும் குருவிகள் விலங்குகளும் இருந்தன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வோர் ஒலியை எழுப்பின. இது ஆதிமக்களின் கவனத்துக்கு வந்தது. அவர்கள் இவ்வொலிகளை உற்றுக்கேட்டு அவ்வொலிக்குறிகளை அவ்வப்பொருள்களைக் குறிக்க வழங்கினர். கா கா எனக் கத்தும் பறவையை காகம் என்றும், கூ கூ எனக் கூவும் குருவியைக் குயிலென்றும், மா என்று அழும் விலங்கை மாடு என்றும் வழங்குதல் இதற்கு எடுத்துக்காட்டு. இப்பொழுது நடிப்போடு ஒலிக்குறிகளும் கலந்த மொழி உண்டாயிற்று. அதன்பின்பு அவர்கள் தம்மைச் சூழ்ந்திருந்த |