ஆதிகாலத் தமிழுக்கும் பிற்காலத் தமிழுக்கும் சிறிது வேறுபாடு உண்டு. "மொழிகள் தற்காலம் தாங்கி நிற்கும் விகுதி, வேற்றுமை யுருபு முதலிய குறியீடுகள் யாவும், நாளடைவில் வந்து புகுந்தன. இது மொழியாராய்ச்சியாளர் கண்டு அறுதியிட்ட முடிவு. தனியே நின்று பொருள் பயவாக் குறியீடுகளாகிய இவ்வுருபுகள் யாவும் தனியே நின்று பொருள் தந்து உதவிய மொழிகளின் சிதைவில் வந்தமிச்சமெனவும் அவர்கள் துணிந்துள்ளார்கள். ஒரு காலத்தில் திணை பால் இடம் சுட்டா வினைமுற்று ஆட்சி நடைபெற்றிருக்கலாம் என்றும் துணியலாம். மலையாளத்தில் திணைபால் இடம் சுட்டாது காலம் ஒன்றனையே சுட்டும் வினைமுற்று ஆட்சி காணப்படுகின்றது." மொழி, எழுத்துநிலை இலக்கியநிலை இலக்கணநிலை என்னும் நிலைகளை முறையே எய்துகிறது. உலகியல் மொழியின் தெளிவே செந்தமிழ். பேச்சுமொழி, எழுத்துநிலை அடையும்போது ஒரு சீர்திருத்தமும், எழுத்துநிலை கடந்து இலக்கியநிலை பெறும்போது ஒரு திருத்தமும், இலக்கிய நிலையில் நின்று இலக்கணநிலை அடையுமிடத்து இன்னொரு திருத்தமும் அடைகின்றது. * கொடுந்தமிழெ ன்பது மக்களிடையே எளிய வழக்கிலுள்ள தமிழ். கொடுமை-வளைவு. "இயற்கைக்கலையின் திட்டத்தையும் மொழிவரலாற் றுண்மையையும் கைக்கொண்டு அவற்றின்வழி நோக்கின் திணை பால் இடம் * The copious-literature is written in some-what artificial dialect distinguished by the term perfect (sen) from the colloqual called rude, much in the same way as in Aryan India Sanskrit (the purified) is contrasted with prakrit (the vulgur) Indias past. p. 214 A-A Maedonell. |