பக்கம் எண் :

தமிழ் இந்தியா243

விகுதிக் குறியீடனைத்தும் வினைமுற்றுச்சொற்களுக்குப் பிற்காலத்துத் தான் வந்தடைந்தனவென்பது போதரும். பன்னெறிப்பட்டு வரம்பு உணர்த்தற்கின்றிப் பேச்சுநிலையில் மாத்திரமிருந்த மொழியை இலக்கண வரம்பு கொடுத்துச் செந்தமிழாக்கின காலத்துக்குச் சிறிது முன்னர் இவை வழக்கிற் புகுந்திருக்கலாம்.

  "இலக்கணநூல்கள் இயற்றப்பெற்ற காலத்தில் அந்நூல்கள் விதித்த வரம்புக்கு உட்படாதுநின்ற இயற்கைமொழி ஒன்று இருந்திருக்கவேண்டுமெனப் போதிய நியாயங்களால் ஊகிக்கலாம். அவ்வியற்கை மொழியில் திணை பால் இடஞ்சுட்டா வினைமுற்று வழக்குப் பிரயோகம் நடைபெற்றிருக்க வேண்டுமெனவுந் துணியலாம்.

  "மொழியுற்பத்திக்காலத்தில் முதற்றோன்றியனவாகிய பொருட்குறிப்பும், இயக்கப்பண்புக்குறிப்பும், நிலைப்பண்புக்குறிப்பும் பற்றிய பெயர்ச்சொல் வினைச்சொல் உரிச்சொல் என்னும் மூன்றையும் நீக்கிய பிறசொற்களெல்லாம் இடைச்சொல் என்னும் ஒரு பெயருள் அடக்கப்பட்டுள்ளன."1

  அரப்பா மொகஞ்சொதரோப் புதைப்பொருள் ஆராய்ச்சியிற் கிடைத்த பட்டையங்கள் சிலவற்றை ஹெரஸ்பாதிரியார் வாசித்துள்ளார். இப்பட்டையங்களை ஒலிமுறையில் வாசிப்பதற்குக் கருவியாயிருந்தவை பழைய சுமேரிய எழுத்துக்களேயாகும். மொழிகளின் இயற்கை என்னும் நூலில் மாக்ஸ்மூலர் என்னும் பண்டிதர் சீர்திருந்திய மக்களின் மொழிகள்


1. புறநானூற்றின் பழமை --- K. N. சிவராச பிள்ளை.