மாற்றமெய்தும் இயல்பையே இழந்துவிடுகின்றன எனப் புகன்றுள்ளார். இதற்குத் தமிழ்மொழி சிறந்த எடுத்துக்காட்டு.1 இந்தியநாட்டுள் ஆரியர், பரசீகர் ஐரோப்பிய கிரேக்கர், ஸ்கீதியர், கன்ஸ் (Huns) அப்கானியர், தாத்தாரியர், மங்கோலியர், அராபியர் முதலிய பல இனமக்கள் புகுந்து இந்தியமக்களுடன் கலந்துள்ளார்கள். அதனால் புதிய மக்கட் கூட்டங்களும் புதியமொழிகளும் எழுந்தன. 2றைஸ்லி என்னும் ஆசிரியர் இந்தியமக்கள் என்னும் நூலிற் கூறியிருப்பது வருமாறு: மேற்கு இந்தியாவில் வாழ்வோர் ஸ்கிதிய திராவிடர். இப்பிரிவில் மராட்டியப் பிராமணர் குன்பியர் (Kunbis) குறுக்கர் முதலியோரடங்குவர். இவர்கள் ஸ்கிதியர் திராவிடர் கலப்பிற்றோன்றினோர். பஞ்சாப், சிந்து, கூர்ச்சரம், இராசபுத்தானா, மத்திய இந்தியா முதலிய இடங்களில் ஸ்கிதியர் ஒருபோது காணப்பட்டனர். ஆரியத் திராவிடர் ஐக்கிய மாகாணத்திலுள்ள அக்ரா, அயோத்தி, இராசபுத்தானா, பிகார் முதலிய இடங்களில் காணப்படுகின்றனர். மங்கோலிய திராவிடர் வங்காளத்தின் தென்பாகத்திலும், ஒரிசாவிலும் காணப்படுகின்றனர். நேபாளம், அசாம், பர்மா, இமயமலைப் பங்கங்களிலுள்ள தமிழ்மக்களின் கண்கள் மங்கோலியமக்களின் கண்கள் போன்றன. பர்மியர், மங்கோலியருடன் கலந்த தமிழர். துருக்கிய இரானிய தமிழர் பலுச்சிஸ்தானத்திலும் மேற்கு எல்லைப்புறங்களிலும் காணப்படுகின்றனர். அராபிய அல்லது அப்கானிய கலப்புடைய தமிழர் தோற்றத்தில் ஸ்கிதியர் அல்லது துருக்கியரைப் போன்றோர். இவர்கள் பல இன மக்களின் கலப்பினால் 1. The languages of the highly civilised nations on the contrary become more and more stationary and sometimes seem almost to loose the power of change. - Science of language - 1864. 2. The people of Indian - S. H. Risely. |