சித்திரங்கள் பெரும்பாலும் கட்புலனாகும்பொருள்களையன்றிக் கட்புலனாகாத மனவுணர்ச்சிகளையும் பிற பண்புகளையும் விளக்குவதற்குப் பயன்படாமலிருந்தன. ஆகவே மன உணர்ச்சிகளையும் பண்புகளையும் உணர்த்தும் சில குறியீடுகள் சித்திரங்களுடன் கலந்து எழுதப்பட்டன. இது அறிவைக் குறிக்கக் கண்ணையும், காலத்தைக் குறிக்க வட்டத்தையும், நன்றியின்மைக்கு விரியன் பாம்பையும், விடாமுயற்சிக்குத் தேனீயையும், வெற்றிக்குப் கருடனையும் எழுதிக் காட்டுதல் போன்றது. பேரு (தென் அமெரிக்கா) தேசமக்கள் எழுத்துக்குப் பதில் கயிறுகளில் பலவாறு முடிச்சுகளிட்டு வழங்கினர்.1 இவ்வாறு எழுதுவதாலும் மக்கள் உச்சரிப்பு முறையான மொழியில் தம் எண்ணங்களைப் பிறர்க்கு உணர்த்த மாட்டாதவர்கள் ஆயினர். ஆகவே, அவர்கள் சில சித்திரங்களை எழுதி அச் சித்திரங்கள் குறிக்கும் பொருள்களுக்குரிய பெயர்களின் முதல் அசைகளைச் சேர்த்து வாசிக்கக் கருதிய சொற்களின் உச்சரிப்பு வரும் முறையில் எழுத ஆரம்பித்தார்கள். இது கத்திரிக்காயையும் அதன் பக்கத்தே ஒரு கோலையும் எழுதிக் கத்தரிக்கோல் என வாசித்தல் போன்றது. இம்முறையில் எழுதுவதும் மிகக் கடினம் அளித்தமையின் ஒவ்வொரு சொல்லின் உச்சரிப்புக்கும் ஒவ்வொரு. குறியீடு அமைக்கப்பட்டது. இந்நிலைமையிலுள்ளனவே சீன எழுத்துக்களும், மொகஞ்சொதரோ எழுத்துக்களுமாகும். பின்பு மொழியில் எத்தனை 1. The use of the knots in code for the purpose of reckoning and recording numbers seems to have been as universal as the figures of the cats cradle in the practices of the premitive peoples. Both may be said to be indigenous to all lands in which the arts of spinning, weaving and dyeing have been cultivated. In two note-worthy cases tradition makes the knotted Kude serve as letters. In China knot records are said to have preceded the knowledge of writing. The Ancient Quipu-L. Leland Locke. |