இருக்கின்றன என்று உச்சரித்து அறிந்து ஒவ்வொரு ஒலியையும் குறிக்க ஒவ்வோர் குறியீடு அமைக்கப்பட்டது. அக் குறியீடுகளாகிய எழுத்துக்களைச் சேர்த்துச் சொல்லை உச்சரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்திய மொழியில் சித்திர எழுத்துக்கள் அடைந்த பலவகை மாற்றங்கள் அறியப்படுகின்றன. சித்திர எழுத்துக்கள் மண் தகடுகளில் சதுரமான நாணற் குச்சிகளால் எழுதப்பட்டபோது கீறுகளாக அமைந்தன. அவ்வகை எழுத்துக்கள் ஆப்பெழுத்துக்கள் எனப்பட்டன. தமிழ் எழுத்துக்கள் சித்திர எழுத்தில் ஆரம்பித்துப் படிப்படியான பல மாற்றங்கள் அடைந்துள்ளன. தமிழர் பயன்படுத்திய அவ்வகை எழுத்துக்கள் என்றேனும் நமக்குக் கிடைத்தில; சீன எழுத்துக்கள் போன்ற அரப்பா மொகஞ்சொதரோ எழுத்துக்களே கிடைத்துள்ளன. சித்திர எழுத்துக்கள் தமிழில் வழங்கின என்பதற்குரிய பிரமாணங்கள் யாப்பருங்கலவிருத்தி மேற்கோள், திவாகரம் முதலிய நூல்களிற் காணப்படுகின்றன. "காணப் பட்ட வுருவ மெல்லாம் மாணக் காட்டும் வகைமை நாடி வழுவி லோவியன் கைவினை போல எழுதப் படுவ துருவெழுத் தாகும்." (யாப்பருங்கலவிருத்தி-மேற்கோள்) "உருவே யுணர்வே யொலியே தன்மை எனவீ ரெழுத்து மீரிரு பகுதிய." (இலக்கணக் கொத்து மேற்கோள்) மொகஞ்சொதரோ எழுத்தினின்றும் பிராமி எழுத்துத் தோன்றிற்று. இது அசோகன் காலத்தும் அதற்கு முன்பும் வடபிராமி, தென்பிராமி என இரு வகையாக நடைபெற்றது. பிராமி எழுத்துக்கள் கி.மு. 9-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு . |