உள்ளதென்பதற்கு ஆதாரமுண்டு. இவ்வகை எழுத்துப் பொனிசியாவிலே மோப்நகரின் (Moab) அரசனது (கி.மு.. 850) பட்டையத்திற் காணப்படுகின்றது. இக்காரணத்தினால் பொனிசிய வியாபாரிகளிடமிருந்து இந்திய மக்கள் எழுத்தெழுதும் முறையை அறிந்தார்கள். என்று வரலாற்று நூலார் எல்லோருந் துணியலாயினர்.1 ஆனால், மொகஞ்சொதரோ எழுத்துக்கள் ஆராயப்பட்ட பின் இம்முடிவு நேர்மாறக மாறியுள்ளது.2 பிராமி எழுத்துக்களினின்று பொனிசிய எழுத்துக்களும், பொனிசிய எழுத்துக்களினின்று கிரேக்க, உரோமை எழுத்துக்களும், இவைகளினின்றும் ஏனைய ஐரோப்பிய எழுத்துக்களும் தோன்றின. பிராமி எழுத்துக்களினின்றும் தமிழ் வட்டெழுத்துக்களும், வட்டெழுத்துக்களிலிருந்து இக்காலத் தமிழெழுத்துக்களும் வளர்ச்சியடைந்தன. வட்டெழுத்து அண்மைக்காலம் வரையில் மலையாளத்திலே கோலெழுத்து என்னும் பெயருடன் வழங்கிற்று. 1. Brahmi has been traced back to the Phoenician type of writing represented in the inseription of Meshu king of moab. (850 B.C). Dr. Scoff however in his remarkable commentary to the Pereplus of the Erthrean sea, clams a Phoenician origin for the Dravidian alphabet (P. 229) -G. Elliot Smith. 2. It is also shown that those scholars were not mistaken who connected Brahmi with the south Semitic and Phoenician scripts. For there is much evidence to show that they were also derived from the script of Harappa and Mohenjo-Daro-G. R. Hunter. The two Brahmi Scripts one of northern and the other of Southern India are developments of Mohenje-Daro script., that of South India is the direct continuation and development of Mohenjo-Daro script by Dravidian people of South India, Several signs of the Mohenjo-Daro Script are found in the prehistoric pottery of Tinnevelly District in rock inseriptions of Nilgiris and tombs of Hyderabad States-Rov. Fr. Heras. . |