"மொகஞ்சொதரோ எழுத்துக்குறிகள் போன்ற (ஸ்பானிய எழுத்துக் குறிகளையும் அவைபோன்ற உச்சரிப்பு ஒலிகளையும் ஐபீரியா) மொழியிற் காணலாம். (இம்மொழி பாஸ்கு எனவும் வழங்கும்.) "எதிரூஸ்கிய (பழைய இத்தாலிய) மொழி எழுத்துக்கள் இலிபிய மொழி இனத்தைச் சார்ந்தன. இம்மொழியில் மொகஞ்சொதரோ எழுத்துக் குறியீடுகளையும் உச்சரிப்பு ஒலிகளையும் காண்பது வில்லங்கமன்று. "பிந்திய இலிபிய மொழி எழுத்துக்களும் நுமிதிய பேபெரிய (Numidic and Berberic) எழுத்துக்களும் முன் குறிப்பிட்ட இயல்பினவே. " மினோவ (Crete) எழுத்துக்கள் மிகப் பழையன. இவை மொகஞ்சொதரோ எழுத்துக்களோடு கிட்டிய ஒற்றுமையுடையன. சைபிரஸ் எழுத்து மினோவ எழுத்தின் ஒரு பிரிவினதே. "சில மொழிகள் எழுத்துக்கள் இல்லாமல் இருந்தன. அம்மொழிகளுக்குரியோர் திராவிட மக்களோடு ஊடாடிய பின் மொகஞ்சொதரோ எழுத்துக்களைச் கையாண்டனர். பின்பு அவர்கள் அவ்வெழுத்துக்களைத் தாமே வளர்ச்சி செய்தனர்." "சுமேரிய மொழிக்கும் மொகஞ்சொதரோ மொழிக்கும் நெருங்கிய உறவு உண்டு. இக்கொள்கையைப் பேராசிரியர் குலாங்டன் தமது விரிவுரைகளில் நன்கு வலியுறுத்திள்ளார். "ஆப்பெழுத்துக்கள் சுமேரிய எழுத்துக்களினின்றும் பிற்காலங்களில் வளர்ச்சியடைந்தன." "பழைய எல்லம் மொழி எழுத்துக்கள் இன்னும் வாசிக்கப்படாமல் இருக்கின்றன." "பழைய சீன எழுத்துக்கும் மொகஞ்சொதரோ எழுத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இது இவ்வளவு காலமும் ஒருவர் கருத்திலும் படவில்லை. மொகஞ்சொதரோ எழுத்துக்களும் பழைய சீன எழுத்துக்களும் ஒரு தாய் வயிற்றிற் பிறந்த இரண்டு பிள்ளைகள் என்று கூறலாம். கோயங் (Hoang கி. மு. 2500) கூற்றால் இது வலியுறுகின்றது. |