பக்கம் எண் :

தமிழ் இந்தியா251

"சாபிய அல்லது தென் அராபிய எழுத்துக்கள், இன்னும் மொகஞ்சொதரோ எழுத்துக்குறிகள் சிலவற்றைக் காப்பாற்றி வைத்திருக்கின்றன. கிழக்குத்தீவுகளில் எழுத்துக்கள் பெரும்பாலும் மொகஞ்சொதரோ எழுத்துக்களைப்போலவேயிருக்கின்றன; சில ஒன்றாகவே காணப்படுகின்றன."1


பேராசிரியர் சி. ஆர். கன்ரர் கூறியிருப்பது வருமாறு:

  "துளையிட்ட பழைய இந்திய நாணயங்களிற் காணப்படும் அடையாளங்களும் மொகஞ்சொதரோ எழுத்துக்களைப் பின்பற்றியனவே. மொகஞ்சொதரோ எழுத்துக்களிலிருந்து பிராமி எழுத்து மாத்திரமன்று தென் அரேபிய, மினோவ எழுத்துக்களும் பிறந்தன. மொகஞ்சொதரோ எழுத்துக்கள் தெற்கு ஆசியா வழியாக வந்து பொனிசிய கிரேக்க உரோமை எழுத்துக்களைப் பிறப்பித்திருக்கின்றன".2

  "சுமேரியம் எல்லம் முதலிய மொழிகள் திராவிட மொழிகளோடு ஒலி முறையில் ஒற்றுமையுடையன. ஆகவே டாக்டர் சர்தேசி என்பவர் கிரேத்தா, இலிசிய, சுமேரிய, எல்லம் மொழிகள் ஒரே தொடர்புடையனவென்றும்., ஐசியன் தீவுகள் சின்ன ஆசியா, மெசபெ தேமியா முதலிய நாடுகள் ஒரே நாகரிக இணைப்புடையனவாயிருந்தனவென்றுங் கூறுவர்." ("திராவிட இந்தியா" பக்கம் 41-42.)

எப்படி மத்தியதரை மக்களும் திராவிடமக்களும் ஒரே இனத்தவர்களாகக் காணப்படுகின்றார்ளோ, அப்படியே அவர்கள் மொழிகளும் ஒரே இனத்தைச் சார்ந்தன என இக்கால மொழி நூலார் ஆராய்ந்து


  1. Light of Mohenjo-Daro-Fr. Heras-New Review 1936.
"Their underlying principles are the same, and there is very likelyhood that they all derived from one common origin went back to neolithic times. -Mohenjo-daro and Indus Civilization-p. 41, Sir John Marshall.

  2. Riddles of Mohenjo-Daro.- G. R. Hunter-New Review Vol. 3-p.314. There can be no doubt concerning the Idenitity of the Indus and the Easter Island scripts.-This same script has been found in seals precisely similar to Indian seals in various parts of ancient sumer, at Susa and the border islands east of Tigris.-Prof. S. Langdon.