பக்கம் எண் :

252தமிழ் இந்தியா

கூறியுள்ளனர். மொழி நூலார் கூறிய முடிவுகளை எல்லாம் ஒருங்கு வைத்து ஒப்பு நோக்கிய வெல்சு என்னும் ஆசிரியர் மத்தியதரை நாடுகளில் ஆதியில் வழங்கிய ஆரியமல்லாததும் கமத்தியும் அல்லாததுமாகிய மொழி, பாஸ்க்கு (Basque) எனப்படும் என்றும், அது திராவிட மொழிக்கு நெருங்கிய உறவுள்ள தென்றும் குறிப்பிட்டுள்ளார். அதன் சுருக்கம் வருமாறு :

  பாஸ்க்குமொழி, காக்கேசிய மலைப்பக்கங்களிற் பேசப்படும் மொழிக்கு இனமுடையது; ஒருகாலத்து அது மிகவும் பரவலை அடைந்திருந்தது; முந்திய கமத்திய மொழிக் கூட்டங்களாகப் பரந்து மத்தியதரை மக்களாற் பேசப்பட்டது; தெற்கு ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவிலும் வழங்கியது; இந்தியாவிலுள்ள திராவிட மொழிக்கு நெருங்கிய தொடர்புடையது.

  மேற்குத், தெற்கு ஐரோப்பாவில் பத்தாயிரம் ஆண்டுகளின் முன் மொழிக்கூட்டங்கள் தோன்றியிருந்தன. ஆரியம் வருதலும், அவை மறைந்தன. பழைய மொழியைச் சார்ந்தவை 1கிரேத்தா இலிதிய மொழிகள், இவை 2பாஸ்க்கு மொழியைச் சேர்ந்தவை ஆகலாம்.

  மங்கோலியம், பாஸ்க்கு, காக்கேசியம் முதலிய மொழிகளை இணைக்கும் மொழி சுமேரியமாக விருக்கலாம். இது மெய்யாகவிருந்தால், பாஸ்க்கு, காக்கேசியம், திராவிடம், மங்கோலியம் முதலிய மொழிகள் இன்னும் மிகப்பழைய மொழிகளாகும். ஆரியம் செமித்தியம் கமித்தியம் முதலிய மொழிகளைத் தொடுக்கும் மொழி ஒன்று கண்டு பிடிக்கப் படாமலிருக்கலாம். குட்டி யீனும் விலங்குகள் எப்படிப் பல்லி முன்னவையிலிருந்து
(ancestors) வளர்ச்சியடைந்து பல்லிக்கு இனமாயிருக்கின்றனவோ அது போன்ற "இனமே அம்மொழிகளுக்கும்


1. Crete . 2. காக்கேசியம், திராவிடம், சுமேரியம், எல்லம் முதலிய மொழிக்குலங்கள்.