பக்கம் எண் :

254தமிழ் இந்தியா

துன்பத்தில் ஆழ்ந்திருத்தல் என்னும் பொருள்தரும் பகில் (Pagil) என்னும் சொல் கன்னடத்தில் உள்ளது. முதலிலும் கடையிலும் என்பதைக் குறிக்கும் கடிதல, கொடிதல என்னும் சொல் துளு மொழியில் காணப்படுகின்றது. பழைய திராவிடச்சொற்கள் பிராகூய் மொழியிற் காணப்படலாம். கண் கல் என்னும் சொற்கள் க்கண் (Khan) க்கல (Khal) என அம்மொழியில் வழங்குகின்றன.

  "யான் மொகஞ்சொதரோப் பட்டையங்களிற் காணப்பட்டவற்றை ஒலிமுறையில் எழுதி வைத்திருந்து அவைகளை யாழ்ப்பாணம் சுவாமி ஞானப்பிரகாசருக்கு வாசித்துக் காட்டினேன். அவர் அவைகளின் இடையே இருபத்தைந்து செய்யுட்களின் பகுதிகள் இருப்பதைக் கண்டு பிடித்தார். அப்பாட்டுக்கள் பலவகைப் பா இனங்களில் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் ஐந்து, குறள் வெண்பாக்கள், படிப்பவர்கள் அதில் ஒன்றைக் கேட்க விரும்பலாம். ஆகவே அவற்றுள் ஒன்றைக் ஈண்டு்த் தருகின்றேன்.


நண்றுறுறு தூக்குஅடு கார்முகில்ஊர் வேலிஒரூர்
எடுஎட்டு று உயர்எல் இர்ஆர்இரி பேர்கடவுள்


  ஓர் ஊர் என்னும் ஆண்டை அடைகின்ற சத்தமிடும் உயரச்செல்லும் ஞாயிற்றின் இரண்டு வழிகளையுடைய பச்சைக் (பயிர் ?) கடவுள் மலைமுகில்களும் இடியுமுடைய நாட்டுக்கு வெளியே உள்ளது.1


  1. இச்செய்யுளிலுள்ள சொற்கள் சில நமக்கு விளங்கக்கூட வில்லையாயினும், அவற்றுட் பல விளங்கக்கூடியனவாயிருக்கின்றன.