பக்கம் எண் :

தமிழ் இந்தியா255

இன்னொரு பட்டையத்திற் காண்பது,

"கல்லர் மீனவர் கான் கடஎர் வல்விடடு
கல்குறவ வல் குரங்கர் நால்" என்பது.


  கலந்த (உறவுகொண்ட) நாடுகளின் மக்களிடையே நாலு வலிய குரங்கர் தோன்றும் (அம்மக்களின்) கோட்டை வலிய காலுள்ள மீன வராற் பிடிக்கப்பட்டது என்பது இதன்பொருள்.

  தல் தா விட்டில் என்பதற்கு விளங்குகின்ற வீடு என்று பொருள். தல் விளங்குதலைக் குறிக்கும். முகில் என்பது மழையில்லாத முகிலையும், கருமுகில் என்பது மழை முகிலையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளன.

  கல்பேட் என்னும் ஆசிரியர் கோரியா மொழி இலக்கணம் திராவிட மொழிகளின் இலக்கணத்தை ஒத்திருப்பதை ஆராய்ந்து காட்டியுள்ளார்.1
 

இடப்பெயரும் மக்கட்பெயரும்

  முற்காலத்தே ஊர்கள் பெரும்பாலும் கோயிலைச் சுற்றி எழுந்தன. அவ்வாறு எழுந்த இடங்கள் கோயிலின் பெயர்களால் அறியப்பட்டன.2 மேற்கு ஆசியாவிலே அசுர் என்னும் கடவுளின் கோயில் எழுந்த இடம் அசிரியா எனவும், பேபெல் என்னும் கோயில் தோன்றிய இடம் பபிலோன் எனவும், நினேவ் என்னும் ஆற்றுத் தெய்வம் கோயில் கொண்ட இடம் நினேவா எனவும் பெயர் பெற்றன. சிறிய ஊர்கள் பல சேர்ந்தது ஒரு நாடாகும். சிறிய ஊர்களில் வாழும் மக்கள் சிறப்பாக நாட்டின் பெயரால் அறியப்பட்டனர். ஒரு நாட்டு மக்கள் இன்னொரு நாட்டிற் சென்று குறியேறினால் அந்நாடு குடியேறிய மக்களின் பெயரை ஏற்றலும் இயல்பு.


  1. H.B. Halbert has issued a comparative grammar of Korian and certain of Dravidian languages of India to demonstrate the close affinity he finds between them - Ibid - p. 45.

  2. The names to towns have continually been derived from those of Gods there worshipped as has been pointed to by several archaealogists. - The Syrian stone lore, p. 18.