பக்கம் எண் :

256தமிழ் இந்தியா

இது பிரித்தனில் அங்கிளர் குடியேறினமையின் அது அங்கிள்லாந்து (இங்கிலாந்து) எனப்பட்டது போன்ற வழக்கு, ஆதியில் ஆண்ட அரசனின் பெயர்களைக்கொண்டு இடங்களுக்குப் பெயர் உண்டாவதுமுண்டு.1

மக்கட் பெயரிலிருந்து மொழிப்பெயர்

  மக்கள் எப்பெயரால் அறியப்படுகிறார்களோ அப்பெயரிலிருந்தே மொழிப்பெயர் தோன்றுதல் இயல்பு, சேர்மனி, சேர்மனியர், சேர்மனியம்; கிரீஸ், கிரேக்கர், கிரேக்கம்; மலையாளம், மலையாளர், மலையாளம் : தெலுங்கானம், தெலுங்கர், தெலுங்கு போன்றன இதற்கு எடுத்துக்காட்டு.
 

தமிழ்ச்சொல் தோற்றமும் இவ்வகையினதே

  தமிழ் ஆதியில் மொழிக்கு உண்டான பெயரென்றும், அப்பெயரினின்றும் மக்களுக்கும் நாட்டுக்கும் பெயருண்டாயிற்றென்றும், அண்மைக் காலத்து ஆசிரியர்கள் பிறழ உணர்ந்தமையால் தமிழின் தோற்றத்தைப்பற்றிப் பலவாறு கூறியிருக்கின்றனர். மக்கட் பெயரிலிருந்தே மொழிப்பெயர் உண்டாதல் விதி என்பதை விளக்கி ஆசிரியர் சிவராசபிள்ளை அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் பகுதி வருமாறு :
 


   1. We read in Mahabharata, that through the grace of Deergramani, Sudeslma wife of Bali bore him five sons, Anga, Vanga, Kalinga, Pundra and Sumha respectively, and the provinces ruled over by them were called after them. We find this story narrated also in the Brahmapurana. Kalinga is mentianed in the sutras of Panini - Orissa and her remains- Ancients and Modern. p.7.- Mana Mohan Ganguly.

  கந்தபுராணத்திலே அண்டகோசப்படலத்தில் நவகண்டங்களுக்குப் பெயர் வந்தது அந்நாடுகளை ஆண்ட அரசர்களின் பெயரால் எனக் கூறப்பட்டுள்ளதும் ஈண்டு கருத்திற்கொள்ளத்தக்கது.