பக்கம் எண் :

260தமிழ் இந்தியா

எல்லம் ஈழமானபோது சிங்கஎல்லம் சிங்களமாயிற்று ழகரம் ளகரமாதலன்றி ளகரம் ழகரமாதலில்லை எனக் சிலர் கூறுவர். சோளர் என்றிருக்க வேண்டியது சோழர் என வழங்குவதை நோக்குக. ளகரம் ழகரமாக உச்சரிக்கப்படும் சொற்கள் பல மொழியாராய்ச்சியால் அறியப்படுகின்றன.

  மெகஸ்தினஸ் காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் ஒரு சிறிய ஆறுபோன்ற கடல்பிரித்தது. ஆகவே ஒருகாலத்தில் தென்னிந்தியாவும் இலங்கையும் ஒன்றுபட்டு இருந்தன எனக்கொள்ளுதல் பிழையாகாது. ஒரு காலத்தில் தாமிரவர்ணி ஆறு இலங்கைவரையிற் சென்றதெனக் கருதப்படுகின்றது. தாபிரபேன் என்னும் இலங்கையின்பெயர் தாமிரவர்ணி என்பதன் திரிபு என வரலாற்று ஆசிரியர்கள் சிலர் எழுதியுள்ளார்கள். இவை போன்ற சான்றுகளால் இந்தியா இலங்கை என்னும் இரு நாடுகளும் ஒன்று சேர்ந்திருந்தனவென்று துணிதும், தென்இந்தியாவும் இலங்கையும் சேர்ந்த நாவலந்தீவின் பகுதி; முன்பு எல்லம் என்றே வழங்கியிருத்தல் கூடும். சுமேரியமக்கள் தென்னிந்தியா அல்லது இலங்கையிலிருந்து சென்றவர்கள் என்பது துணிவு.1

  தமிழ்நாட்டினின்றும் சென்ற சுமேரியர் தமது நாட்டிலுள்ள இடம் ஒன்றுக்கும் மலை ஒன்றுக்கும் எல்லம் என்னும் பெயர் கொடுத்துள்ளார்கள். ஒரு நாட்டினின்றும் சென்று இன்னொரு நாட்டிற் குடியேறும் மக்கள் தம் நாட்டு இடப்பெயர்கள் சிலவற்றைத் தாம் குடியேறிய நாட்டின் இடங்களுக்கும்


  1. The accounts given by Berosus in the 3rd or 4th century B.C. appears to suggest that the early settlers of sumer arrived by sea bringing with them a fully developed civilization. This civilization may possibly have arisen in the submerged Tamil lands that extended to the south of Kumari - Cultural Heritage of India Vol. III, p. 677.