இட்டுவழங்குதல் இயல்பு. இதற்கு எடுத்துக்காட்டுகள் வேண்டா. இதனாலும் கிழக்கில் ஓர் எல்லம் இருந்ததென்பதுதெற்றெனப் புலப்படும். முற்காலத்து இடப்பெயர்கள் பெரும்பாலும் வழிபடு கடவுளர் தொடர்பாக உண்டாயின என்பது முன் காட்டப்பட்டது. மேற்கு ஆசியாவில் எல் தொடர்புடைய நூற்றுக்கணக்கான பெயர்களைக் காணலாம். சுமேரியாவிற் போலவே கிழக்கிலும் எல்லம் மாத்திரமன்று எல்லம் மலையும் இருந்தது. அதற்குச் சிவனொளிமலை என்பதும் பழைய பெயர். இப்பெயர் புத்தர் காலத்துக்கு முற்பட்டது. மனுவின் பேழை தங்கியதாகப் புராணங் கூறும் வடமலை இதுவே யாதல் கூடும். சுமேரியர் வழிபட்ட ஞாயிற்றுக்கடவுள் தாமுஸ் 1 அல்லது தாம்சி எனப்பட்டார். இப்பெயருடன் இக்கடவுள் பொனிசியாவிலும் மற்றும் நாடுகளிலும் வழிபடப்பட்டார். தமிழ் என்னும் சொல் இரு சொற்களின் மரூஉ என்பது நன்கு அறியக்கிடக்கின்றது. அதன் இறுதி, எல் என்பதன் திரிபாகிய இல், இல்லே பின் இழ் ஆயிற்று. தமிழ், ஞாயிற்றினின்றும் பிறந்ததென்னும் வழக்குண்மையும், எல்லம் என்பது ஞாயிற்றுக் கடவுளை வழிபட்ட மக்களின் நாட்டைக் குறித்தலும், மாகறல் கார்த்திகேய முதலியார் தமிழ் ஞாயிற்றைக் குறிக்கும் ஒரு சொல்லினின்றும் பிறந்ததெனக் கூறுதலும் மிக ஒத்துள்ளன. உண்மை இவைகளுக்கு அண்மையில் கிடக்கின்றது. கார்த்திகேய முதலியார், தமிழ், தாமம் என்னும் சொல்லினின்றும் 1. இலங்கையில் தாமு தாமன் என்னும் பெயர்கள் மக்கட்கு வழங்கப்படுகின்றன. |