பிறந்ததென்கிறார். இதிலும் பெரிய உண்மையிருக்கின்றது. தாமம் என்னும் சொல் மலையையும் ஞாயிற்றையும் இன்னும் பல பொருள்களையும் குறிக்கும். ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டாயின் அது மிகப் பழையசொல் எனக் கொள்ளுதல் வேண்டும். வெவ்வேறு அடியாகப் பிறந்து வெவ்வேறு பொருள்களை உணர்த்திய சொற்கள்பல, காலத்தில் திரிந்து மருவி உச்சரிப்பில் ஒரு சொல்லாக வருதலுண்டு. இவ்வுண்மை மொழியாராய்ச்சியால் நன்கு அறியப்படும். தாமம் என்னும் சொல் மிகப் பழையதாயிருத்தலாலும், தமிழ் நாட்டினின்றும் சென்ற சுமேரியர் ஞாயிற்றுக் கடவுளைத் தாமுஸ் என வழங்கியமையாலும் இலங்கையிலுள்ள ஞாயிற்று மலை தாமம் எனவும், அம்மலையையுடைய நாடு தாமம் எல்லம் எனவும் வழங்கியிருக்கலாமோ என்பன சிந்திக்கத்தக்கன. அவ்வாறாயின், தாமம் தாம் என மருவித் தாமெல்லமாகி, எல்லம் ஈழமானபோது தாமீழமாய்ப் பின் தமிழம், தமிழாயிற்றெனக் கொள்ளலாம். சிவன் என்பது ஞாயிற்றின் பழைய பெயரென்பது முன் விளக்கப்பட்டது. இவ்வாறு கொள்ளின், தமிழ், ஞாயிற்றினின்றும் பிறந்தது; அது சிவன் முருகன் முதலிய கடவுளர்களோடும் சைவசித்தாந்தத்தோடும் தொடர்புடையது என்று வரும் பழைய வழக்குண்மைகளுக்கு ஒருவாறு விளக்கம் உண்டாகின்றது. இவ்வாறு கூறுதல் தமிழை இலங்கையோடு தொடர்புபடுத்துதற்குரிய சூழ்ச்சி எனச் சிலர் கருதலாம். ஒரு காலத்தில் தமிழரின் இருப்பிடம்1 தெற்கிலேயே இருந்ததென்றும், இலங்கையும் 1. Hence we shall not be far wrong if we infer that South India gave a refuge to the surrivors of the deluge, that the culture developed in Lemuria was carried in south India after this submergence and the South Inida after its submergence was probably the cradle of the post deluvian human race. As the centre of gravity of the Dravidian people as determined by the density of population lies somewhere about Mysore, south of India must be considered as the home of the people, where they might have spread to the north - Indian Antiquary 1911, p. 118. |