பக்கம் எண் :

தமிழ் இந்தியா263

தென்னிந்தியாவும் அக்காலத்து வெவ்வேறாக இருக்கவில்லையென்றும் இன்னும் ஒருமுறை நினைவுறுத்துகின்றேம்.


வடக்கே வழங்கிய மொழியின் வரலாறு

  ஆரியர் இந்தியாவை அடைவதன் முன் இந்தியா முழுமையும் தமிழ் வழங்கிற்று, ஆரியர்களுடைய வேத பாடல்கள் பிராகிருத மொழியில் செய்யப்பட்டன. பிராகிருதம் இலக்கண வரம்பில்லாத மொழி. பிராகிருதத்தின் திருத்தமே சமஸ்கிருதம் எனப் பெயர்பெற்றது. ஆரியமக்கள் பிராகிருத மொழியைப் பேசினார்கள். வேத பாடல்களில் பல திராவிடச்சொற்கள் காணப்படுகின்றன. அவர்கள் பிராகிருதத்தோடு திராவிடச் சொற்களையும் கலந்து பேசினார்கள். உற்பத்தியில் வடமொழியைச் சார்ந்தன எனப்படும் வட இந்திய மொழிகளின் அமைப்புத் தமிழை ஒத்திருத்தலின் நாளடைவில் அவ்வாரிய மக்கள் தமிழையே பேசத் தொடங்கினார்கள் என்றும், அவர்கள் வழங்கிய தமிழில் பிராகிருதச் சொற்கள் பெரிதும் காணப்பட்டன என்றும் கொள்ளுதல் அமையும். கி. மு. 6- ம் நூற்றாண்டில் விளங்கிய கௌதமபுத்தர் தம் அருள் மொழிகளை மகத மொழியில் (பாளியில்) செய்தார்.1 வட மொழியில்லாத எ.ஒ. முதலிய குறில்கள் பானியிற் காணப்படுகின்றமையால்


  1. The existence of the short e and o in the Pali and the predilection the people showed for them as well as the change of dentals to cerebrals without any influencing cause are to be attributed to the natural vocal tendencies of the people. These sounds must be have existed and played an important part in the original language of the people.... If the original pali speakers belonged to the same race as Dravidians of South India of present day, we have a reason to believe that their native tongue continued them; for they exist in the Dravidian language and are characteristic of them - Willsons philological lectures:- Dr. R. G. Bhandarkar-Collected works Vol. IV, p. 293.