பக்கம் எண் :

264தமிழ் இந்தியா

பாளி மொழி வழங்கிய நாட்டில் முன்பு தமிழ் வழங்கியதென்பதும் பாளிமொழிக்குரியோர் தமிழரென்பதும் முன் ஓரிடத்திற் கூறப்பட்டுள்ளன. புத்தருடைய மதக்கொள்கைகள் சாங்கியமதத்தைத் தழுவியவை.1 சாங்கியமதம் வேதமதத்துக்கு மாறுபட்டது. கி.மு. 5-ம் 4-ம் நூற்றாண்டுகளில் புத்த நூல்கள் பிராமிஎழுத்தில் எழுதப்பட்டன. மரப்பட்டையை வார்ந்து எடுத்த மிருதுவான அதன் உட்பகுதியும் ஓலைகளும் எழுதப் பயன்படுத்தப்பட்டன. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட புத்த பட்டையங்களில் மசி என்னும் சொற் காணப்படுகின்றது. ஆகவே, அக்காலத்து எழுதுவதற்கு மசியும் பயன்படுத்தப்பட்டதெனத் தெரிகின்றது.

  அசோகர் காலத்தில் பாளி மொழி வழங்கிற்று. பாணினியின் இலக்கணம் பிராமி எழுத்தில் எழுதப்பட்டது. அசோகரின் பட்டையங்கள் பிராகி ருதத்தில் எழுதப்பட்டன. புத்தரும் சைனரும் சமஸ்கிருதத்தைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் பிற்காலத்திலேயே சமஸ்கிருதம் பயின்றனர். அப்பொழுது பிராகிருதம் பாளிக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையிலுள்ள ஒருநிலையை அடைந்திருந்தது. அம்மொழி புத்தரின் வரலாற்றைக் கூறும் லலிதவிஸ்தரா என்னும் பாடலிற் காணப்படுகின்றது. இது கதாமொழி


  1. It cannot be doubted that Buddha grew up in the atmosphere of sankya thought for it is the essential basis of his world view. - Indias Past p. 151-A. A. Macdonell.