எனவும்பட்டது. கி. பி. முதலாம் நூற்றாண்டில் வடக்கே உள்ள மதுமையில் பொறிக்கப்பட்டசைன பட்டையங்களில் பிராகிருதம் காணப்படுகின்றது. இதற்குப் பின் சமஸ்கிருதம் வழக்கில் இருந்தது. சமஸ்கிருத பட்டையங்கள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கின்றன. கி, பி. ஆறாம் நூற்றாண்டு முதல் சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டுவந்தது. ஆனால், சைனர் இதனைப் பயன்படுத்தவில்லை. ஆறாம் நூற்றாண்டில் புத்த நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன கி. பி. 7-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த தியான்சியாங் என்னும் சீனப் பிரயாணி புத்த சன்னியாசிகள் சாதாரண பேச்சிலும் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தினர் என எழுதியுள்ளான். மகமதியர் காலம் வரையில் சமஸ்கிருதம் எழுத்து மொழியாக விருந்தது. பஞ்சாபி, இந்தி குசராத்தி, மராட்டி முதலியன பிராகிருதத்தினின்றும் பிறந்தனவாயினும் அமைப்பில் திராவிட மொழிகளை ஒத்தன. சமஸ்கிருத நூல்கள் தேவநாகரி யில் எழுதப்பட்டன. இந்தி, மராட்டிய புத்தகங்கள் இவ்வெழுத்தில் அச்சிடப்பட்டிருக்கின்றன. இவ்வெழுத்தில் கி. பி. 8-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழைய பட்டையங்களும், கி. பி. 12-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழைய கையெழுத்து நூல்களும் காணப்படுகின்றன. ஆரிய வர்த்தம் அல்லது இந்து ஸ்தானம் எனப்பட்ட விந்ததுத்துக்கும் இமயத்துக்கும் இடைப்பட்ட நாட்டில் கி. மு. 200 வரையில் ஆரியம் வழங்கியதெனக் கூறலாம். சமஸ்கிருத நாடகங்களில் அரசரும் இருடிகளும் சமஸ்கிருதத்திலும், பெண்களும் பொது மக்களும் பிராகிருதத்திலும் பேசுவதாக எழுதப்பட்டிருத்தல் காணப்படுகின்றது. ஆகவே, பிராகிருதமே மக்கள் மொழியாயிருந்ததெனத் தெரிகின்றது. சமஸ்கிருதம் |