இலக்கிய மொழியாயிருந்ததன்றி ஒருபோதும் பேசப்படவில்லை. வடக்கே காணப்படும்மொழிகளுள் முக்கியமுடையன பின் வருவன : (1) மேற்கு இந்தி, (2) கிழக்கு இந்தி, (3) இராசஸ்தானி, (4) குசராத்தி, (5) பஞ்சாபி, (6) காஸ்மீரி, (7) லாகின்டா (Lahinda), (8) சிந்தி, (9) மராட்டி, (10) பீகாரி, (11) ஒரியா (Orya) , (12) வங்காளி, (13) அசாமி, (14) இந்து சீனம்.* [இந்தியாவின் தொலைவில் (Further India) வழங்குவது. ] தமிழ்ச் சங்கம் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்க மென மூவகைப்பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள். இவருள் தலைச்சங்க மிருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றமெறிந்த குமரவேளும், முரஞ்சியூர் முடிநாக ராயரும் நிதியின் கிழவனுமென இத்தொடக்கத்தார், ஐஞ்நூற்று நாற்பத்தொன்பதின்மரென்ப. அவருள்ளிட்ட நாலாயிரத்து நூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினாரென்ப, அவர்களாற் பாடப்பட்டன எத்தனையோ பரிபாடலும், முதுநாரையும் முதுகுருகும் களரியா விரையுமென இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்க மிருந்தாரென்ப. அவர்களைச் சங்க மிரீஇயினார் காய்கினவழுதி முதலாகக் கடுங்கோனீறாகஎண்பத்தொன்பதின்ம ரென்ப, அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல்கொள்ளப்பட்ட மதுரை யென்ப. அவர்க்கு நூல் அகத்தியம். இனி இடைச்சங்க மிருந்தார் அகத்தியனாரும் தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழியும், மோசியும், வெள்ளூர்க் காப்பியனும், சிறு * இப்பகுதி எ. எ. மாக்டனல் என்பவரின் சமஸ்கிருத இலக்கியங்களின் வரலாறு என்னும் நூலிற் காணப்பட்டவற்றைத் தழுவி எழுதப்பட்டது. |