பக்கம் எண் :

தமிழ் இந்தியா267

பாண்டரங்கனும், திரையன் மாறனுன், துவரைக்கோனும் கீரந்தையுமென இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மரென்ப, அவருள்ளிட்ட மூவாயிரத் தெழுநூற்றுவர் பாடினாரென்ப. அவர்களாற் பாடப்பட்டன கலியும், குருகும், வெண்டாளியும், வியாழமாலையும், வியாழமாலை யகவலுமென இத் தொடக்கத்தனவென்ப. அவர்க்கு நூல் அகத்தியமுந் தொல்காப்பியமும், மாபுராணமும், இசை நுணுக்கமும், பூதபுராணமென இவையென்ப. அவர் மூவாயிரத்தெழுநூற்றியாண்டு சங்கமிருந்தாரென்ப. அவர்களைச் சங்க மிரீஇயினார் வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மரென்ப. அவருட் கவியரங்கேறினார் ஐவர் பாண்டியரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது *கபாடபுரத்தென்ப. அக்காலத்துப்பொலும் பாண்டிய நாட்டைக் கடல்கொண்டது.

  "இனிக் கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறுமேதாவியாரும், சேந்தம்பூதனாரும், அறிவுடையரனாரும், பெருங்குன்றூர் கிழாரும், இளந்திருமாறனும், மதுரையாசிரியர் நல்லந்துவனாரும், மருதனிள நாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரு மென இத்தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர் பாடினாரென்ப. அவர்களாற் பாடப்பட்டன. நெடுங்தொகை நானூறும் (அகநானூறு), குறுந்தொகை நானூறும், நற்றிணை


* "கவாடபுரம் இராமாயணத்திற் கூறப்பட்டுள்ளது. கௌடலியர் தாம்பிரபரணி ஆற்று முகத்துவாரத்திற் பாண்டியருக் குரியதாகிய கபாடம் என்னும் ஓர் இடத்தைக் குறித்துள்ளார். இது ஒருபோது முன் கடல்வாய்ப்பட்ட கபாடபுரத்தை அடுத்த இடமோ, இன்றேல் அதன் பகுதியோ என்று கருத இடமுண்டு."

  Kautalia speaks of pearls being found in the river Tambraparni river, .. on Pandian Kavataka and near the Mahendra mountains - Lectures on the Ancient History of India - D. R. Bhandarkar.