மேற்கு ஆசிய நாடுகளிலும் கோயிற் குருமாரே அரசர்களையும் அவர்காலத்து நிகழ்ச்சிகளையும் பற்றி எழுதிவைத்தார்கள். அக்காலங்களின் இன்ன அரசனின் ஆட்சியின் இத்தனையாவது ஆண்டு எனக் காலம் குறிக்கப்பட்டு வந்தமையின் அரசரைப் பற்றிய வரலாறுகள் எழுதப்படாமல் இருந்தன என்று கூறுதல் அமையாது. மேற்கு ஆசிய நாடுகளில் நூல்கள் களிமண் தட்டுகளில் எழுதிச் சூளையிலிட்டுக் காப்பாற்றப்பட்டன. ஆகவே, அவை மண் செல் முதலியவைகளால் அழிக்கப்படாது பிழைத்தன; அவைகளால் அந்நாடுகளின் வரலாறுகள் ஓரளவு அறியக்கிடக்கின்றன. எகிப்தியரின் வரலாறுகள் பெரும்பாலும் சமாதிச் சுவர்களிலும் சமாதிகளுள் வைக்கப்பட்ட பைபிரஸ் நூல்களிலும் காணப்படுகின்றன. தமிழர் எழுதப் பயன்படுத்திய ஓலை சிறிது காலத்தில் ஒடிந்தும், செல், மண் முதலியவைகளால் உண்ணப்பட்டும், இராமபாணத்தால் துளைக்கப்பட்டும் அழிந்துபோகத்தக்கன. மேற்கு ஆசியாவில் கி. மு. 7-ம் நூற்றாண்டுக்கு முன்னரே பெரிய நூல் நிலையங்கள் இருந்தன.1 மொகஞ்சொதரோத் தமிழர் நாகரிகம் மேற்கு ஆசியமக்கள் நாகரிகத்தைவிட மேலானது என்று 1. .... (Asur Banipal 673 B.C.) adding more to the royal library than all the kings who had gone before him.His agents sought every were for inscribed tablets ransacking the library treasures of Babylone, Borsipa, Akad, Ur, Erek, Larsa, Nipur and Various other cities. - Early faiths of western Asia. - p. 42. Berosus tells us, as a priest of the first temple of Kaldia, he should know that in Babylonia, there were records kept with the greatest care, comprehending a period of fifteen myraids of years, containing the histories of the heaven and of the sea, of birth of mankind, of kings and their memorable actions. Berosus is made to say that before the deluge, there were ten Chaldian monarchies perhaps meaning dynasties - which lasted 432,000 years and which Turanian measures of moons would 33,212 years, a not un-reasonable period for the creation of man - Ibid 43. |