பக்கம் எண் :

தமிழ் இந்தியா271

கருதப்படுகின்றது. உலக மக்களுக்கே நாகரிகத்தை நல்கியவர்கள் என்று சொல்லப்படும் மக்கள் தமது வரலாற்றை எழுதி வைக்காதிருந்தனர் எனக் கூறமுடியாது. நூல்களை எழுதிப் பாதுகாத்து வைக்கும் முறையும் ஒரு நடு இடத்தினின்றும் பரந்துசென்ற வழக்கமே யாதல் வேண்டும். வரலாறுகளை எழுதிக் காப்பாற்றும் பழைய வழக்கைப் பின்பற்றியே இலங்கைப் புத்த குருமாரும் புத்தர் காலம் முதல் வரலாறுகளை எழுதிக் காப்பாற்றினர். அவைகளை ஆதாரமாகக்கொண்டே தீபவமிசம், மகாவமிசம் முதலிய வரலாறுகள் விரித்து எழுதப்பட்டன.1

  புராணங்களில் உண்மை அணுவளவும், பொய் மலையளவும் காணப்படுவதை நோக்கிய சில ஆராய்ச்சியாளர் தமிழ்ப்புலவர்கள் கூறியுள்ள வரலாற்றுண்மைகளிலும் ஐயம் உறுகின்றனர். புராணங்களிலுள்ள கற்பனைக் கதைகளுக்குப் பொறுப்புப் பிராமணரேயன்றித் தமிழ்ப்புலவர்களல்லர் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால், இம்மயக்கம் எழ வழியில்லை. தமிழ்ப் புலவர்கள் உள்ளவற்றை உள்ளவாறே கூறும் இயல்பினரென்பது சங்கச் செய்யுட்களாற் றெளிதும், இராமர் 11 ஆயிரம் ஆண்டு அரசு புரிந்தார், தசரதன் அறுபதினாயிரம் ஆண்டு உயிர் வாழ்ந்தான்


  1. The Attakatha which been handed down by word of mouth to almost the end of the first century B. C. was set down in writing about 20 B. C. This and its continuation to about the middle of the third century A.D. formed basis of the Dipavamsa. The same matter received further and some what further treatment in Budhagosas instruction to the Samantapasadika in the 5th century, and the epic elaboration Mahavamsa in the sixth century. - Ancient India and South Indian history and culture vol. 1, P. 449 - S. K. Aiyengar.