என இயற்கைக்கு மாறான எதையும் இறையனார் களவியலுரை கூறாமை கருத்திற் பதிக்கத்தக்கது. கெரதோதசு ஆசிரியர் ஓர் அரசனுக்குள்ள சராசரி காலம் 33 ஆண்டுகள் எனக் கணக்குச் செய்துள்ளார். மூன்று சங்கங்களும் நடைபெற்ற காலத்தில் இருநநத அரசரின் எண் 197. இவ்வரசர் ஒவ்வொருவருக்கும் முப்பது ஆண்டுகள் ஈந்தால் 5970 ஆண்டுகளாகும். இவ்வாண்டுகள் சந்திர அளவின்படி கணக்குச்செய்து சூரியஆண்டாக்கின் 5470 வரையிலாகும். இறையனார் களவியலுரையில் மூன்று சங்கங்களும் 9990 ஆண்டுகள் நடைபெற்றனவாகக் கூறப்பட்டுள்ளது. பழைய காலக்கணக்குகளில் இவ்வாறு சில பிழைகள் நேர்தல் இயல்பு. கெரதோதசு மூன்று எகிப்தியஅரசர் தனித்தனி 300 ஆண்டுகள் ஆண்டனர் எனக் கூறியுள்ளார். இடையே சில அரசரின் எண் விடப்படுமாயின் அவர்களின் ஆட்சிக்காலம் நீண்டதெனக் கணக்கிடப்படுகின்றது. இலங்கைவரலாற்றில் இவ்வகைப் பிழைநேர்ந்தமையால் சில அரசர் நீண்ட காலம்ஆட்சிபுரிந்தனர் எனக் கருதப்பட்டுப் பின்பு திருதப்பட்டது. கிறித்தவ மறையின் பழைய ஏற்பாடு மறைந்துபோகப் பின்பு அது கி. மு. 5-ம் நூற்றாண்டுக்கும் கி. மு. 3-ம் நூற்றாண்டுக்குமிடையில் எழுதப்பட்டது. அதில் சில அரசர் 800 அல்லது 900 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர்களாகக் கூறப்பட்டிருக்கின்றனர். அதனை நம்ப முடியாவிடினும் அதில் கூறப்படுவன வரலாற்று நூலாரால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இவைகளை எல்லாம் வைத்துநோக்கி இறையனார் களவியலிற் கூறப்பட்ட காலக்கணக்கை ஆராய்தல் வேண்டும். காலக்கணக்கு மிகுதியாயிருப்பதால் சங்கம் நடைபெறவில்லையெனக் கொள்ளுதல் ஆகாது. எட்டுத்தொகை பத்துப்பாட்டு முதலிய நூல்களைப் பாடியபுலவர்கள் தமிழ் நாட்டின் பல கோணங்களில் பல்வேறு காலங்களில் |